வள்ளுவர் சிலையைத் திறந்தால் நடப்பதே வேறு .. எச்சரிக்கிறார் வாட்டாள்
பெங்களூர்:
எங்களை மீறி பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறந்தால் நடப்பதே வேறுஎன்று கன்னடத் தீவிரவாதப் போக்குக் கொண்ட இயக்கமான கன்னட சளுவளிஅமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூர்மல்லேஸ்வரத்தில் பேரணி நடந்தது. ராஜ்குமார் கடத்தலைக் கண்டித்தும், அவரைவிடுவிக்கக் கோரியும் நடத்தப்படுவதாக கூறப்பட்ட இந்த பேரணி தமிழர்களுக்குஎச்சரிக்கை விடுக்கும் விதத்திலேயே இருந்தது.
இந்தப் பேரணிக்கு போலீஸார் அனுமதி தரவில்லை. இருப்பினும் தடையை மீறிகருப்புக் கொடியுடன் இந்த அமைப்பினர் பேரணி நடத்த முயன்றனர். அவர்களைபோலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். மாலையில் அனைவரும்விடுவிக்கப்பட்டனர்.
பேரணியைத் துவக்கி வைத்து வாட்டாள் நாகராஜ் பேசுகையில், ராஜ்குமார் முதலில்வரட்டும். அவர் பத்திரமாக வரும் வரை நாங்கள் பொறுத்திருப்போம். இது வெறும்அடையாள பேரணிதான்.
நக்கீரன் கோபால் பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார். காட்டுக்குள்போவதாகவும், வீரப்பனிடம் பேசுவதாகவும் அவர் கூறுகிறார். ஆனால் காட்டுக்குள்போகாமலேயே பொய்யான ஆடியோ கேசட்டைக் கொண்டு வருகிறார்.
கோபாலால் வீரப்பனைச் சந்திக்க முடிகிறபோது, ஏன் தமிழக போலீஸாரால் அவனைக்கைது செய்ய முடியவில்லை. அனைவரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள்.
பெங்களூரில் எந்தச் சூழ்நிலையிலும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க அனுமதிக்கமாட்டோம். எங்களை மீறித் திறந்தால் நடப்பதே வேறு என்று அவர் பேசினார்.
1991-ம் ஆண்டு நடந்த காவிரிக் கலவரத்தின்போது தமிழர்கள் பாதிக்கப்பட்டனர்.அப்போது நடந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் வாட்டாள் நாகராஜின்கன்னட சளுவளி அமைப்பு இருந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications