சென்னையில் பசுக்கள் பாதுகாப்பு மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பசுக்கள் பாதுகாப்பு மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டார்.
பசு பாதுகாப்பை வலியுறுத்தி சென்னை சேத்துப்பட்டில் உள்ள சங்கராலயத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில்இந்த மாநாடு நடைபெற்றது. காலை 8.30 மணி முதல் பகல் 3 மணி வரை மாநாடு நடந்தது.
இம்மாநாட்டில் பிராணிகள் நல ஆர்வலர்கள், பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கத்தினர், ஜனகல்யாண் அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பசுக்களை பாதுகாத்து பேணுவதன் அவசியம் குறித்து சங்கராச்சாரியார் பேசினார்.
மாநாட்டை ஒட்டி மாலையில் பசு பாதுகாப்பு ஊர்வலம் நடைபெற்றது. தி.நிகர் சிவா விஷ்ணு கோவிலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்திற்குசங்கராச்சாரியார் தலைமை வகித்தார்.
ஊர்வலத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications