கட்சியின் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லையென்றால் நவம்பரில் புதுக் கட்சி - பாஸ்வான்
ஜெய்ப்பூர்:
ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லையென்றால்கட்சியிலிருந்து விலகி நவம்பர் 23-ம் தேதி புதுக் கட்சி தொடங்குவேன் என்று அக்கட்சியின் முக்கிய தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான்கூறியுள்ளார்.
ஜெய்ப்பூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இப்போதைக்குப் புதுக் கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், நான்இப்போதுள்ள ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை.
இனிமேல் கட்சியின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் நான் புதுக்கட்சி தொடங்குவது தவிர்க்க முடியாததாகிவிடும். நவம்பர் 23-ம் தேதி அந்த புதுக்கட்சியைத் தொடங்குவேன். கட்சிக்கு இன்னும் பெயர் தேர்வு செய்யப்படவில்லை.
ஐக்கிய ஜனதா தளம் தேசியக் கட்சியாக இருந்தாலும் பல மாநிலங்களில் அக் கட்சிசெயல்படுவதாகத் தெரியவில்லை. இது வருந்தத்தக்கது. இதுவரை ஐக்கிய ஜனதா தளக்கட்சியின் நிர்வாகத் தேர்தல் நடைபெறவில்லை. ஜனநாயக அமைப்பில் ஒரு அரசியல்கட்சி தனது நிர்வாகத் தேர்தலை நடத்தியாகவேண்டும்.
ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தேர்தல் நடைபெறவில்லை. பாரதீய ஜனதாகட்சி போன்றவை உள்கட்சித் தேர்தலை நடத்தியிருக்கும்போது ஐக்கிய ஜனதா தளக்கட்சியிலும் உள் கட்சித் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றார் பாஸ்வான்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications