என்னைக் கொல்ல முயன்றனர்: குமுறுகிறார் ராமதாஸ்
பாண்டிச்சேரி:
என்னைக் கொலை செய்ய விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் திட்டமிட்டு சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்று டாக்டர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமைநிருபர்களிடம் தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை ராமதாஸ் சென்ற கார் மீது நடந்த தாக்குதல் குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் பாண்டிச்சேரியில் ஏம்பலம் தொகுதி கொடியேற்று விழா நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி வைத்தேன்.
பின்னர் காட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கி கிராமம், கிராமமாக கொடியேற்றிவிட்டு கரிக்கலாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தோம்.அபிஷேகப்பாக்கம் அருகே சென்றபொழுது ஒரு போலீஸ் அதிகாரி எங்களை தடுத்து நிறுத்தி அங்கு ஒரு கோஷ்டியினர் வழிமறித்து நிற்கிறார்கள்.
எனவே இந்த வழியில் செல்வது கடினம் என்றார். அப்பொழுது என்னுடன் காரில் இருந்த கட்சி நிர்வாகிகள் நீதிபதி கோவிந்த ராஜன், ராம்சிங்எம்.எல்.ஏ, மஞ்சினி, முன்னாள் அமைச்சர் மணிமாறன் ஆகியோர் நாங்கள் இந்த வழியாக செல்ல போலீஸ்தான் பாதை ஏற்படுத்தித்தர வேண்டும் என்றுவாதாடினார்கள்.
அப்பொழுது எதிரே ஆயிரம் பேர் கொண்ட ஒரு கும்பல் வேகமாக எங்கள் காரை நோக்கி உருட்டுக்கட்டை கற்கள் போன்ற ஆயுதங்களுடன்முன்னேறியது. உடனே கட்சிப் பிரமுகர்கள் காரின் முன்பக்கம் அமர்ந்திருந்த என்னை பின்பக்கம் அமர செய்து விட்டனர்.
அதற்குள் அந்த கும்பல், அருகில் நெருங்கி வந்து எங்களது கார்கள் மீது சரமாரியாக கல்வீசித்தாக்கியது. அதில் சிலர் அங்குள்ள ஒரு வீட்டின் மீது ஏறிநின்றுகொண்டு காரின் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். எனது பாதுகாப்புக்காக வந்த சண்முகம் உடனே காரின் முன்பக்க பேனட் மீது படுத்து என்னைபாதுகாத்தார்.
இதனால் அவர் மீது கல்வீசப்பட்டதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக எனது கார் டிரைவர் சமயோஜிதமாக செயல்பட்டு காரைபின்பக்கமாக வேகமாக ஓட்டியதால் நான் உயிருடன் தப்பிக்க முடிந்தது.
இந்தச் சம்பவம் என்னைக் கொல்வதற்காக திட்டமிட்டு நடந்த சதியாகும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் தான் காரணம் என்றுகருதுகிறேன் என்றார் டாக்டர் ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாக்கப்பட்ட சம்பவத்தால் பாண்டிச்சேரி உள்பட தமிழகத்தின் வடமாநிலங்கள் அனைத்தும் ஏகபதட்டத்தில் இருக்கிறது. போக்குவரத்து ஆங்காங்கே திருத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் கலவரச்சூழ்நிலை ஆக்கிரமித்திருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications