ஒருசில நாட்களில் கோபால் மீண்டும் காட்டுக்குச் செல்வார் - கருணாநிதி
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரைப் பிடித்து வைத்துள்ள வீரப்பனைச் சந்திக்கநக்கீரன் கோபால் 4-வது முறையாக மீண்டும் காட்டுக்குள் செல்வார் என்று தமிழகமுதல்வர் மு. கருணாநிதி தெரிவித்தார்.
கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ஒரு மணி நேரத்துக்கும்மேலாக தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை மாலை ஆலோசனை நடத்திய பிறகுநிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்று 50நாட்களுக்கும் மேலாகிவிட்டது. இன்னும் ராஜ்குமார் விடுவிக்கப்படவில்லை.
வீரப்பனைச் சந்தித்து ராஜ்குமாரையும் மற்றவர்களையும் விடுவிப்பது பற்றி பேசநக்கீரன் கோபால் மூன்று முறை காட்டுக்குள் சென்றார். வீரப்பனையும்,ராஜ்குமாரையும் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார் நக்கீரன் கோபால்.
வீரப்பன் தெரிவித்த சில கோரிக்கைகளை நிறைவேற்ற கர்நாடக, தமிழக அரசுகள்உத்தரவுகள் பிறப்பித்திருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கால்அந்த உத்தரவுகளை அமல்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சட்டச் சிக்கலால் ராஜ்குமார் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சிறைகளில் இருந்து 121 தடா கைதிகளையும், தமிழக சிறைகளில் உள்ள 5தமிழ்த் தீவிரவாதிகளையும் விடுவிப்பதில் உள்ள சட்டச் சிக்கல் குறித்தும் அவைதொடர்பாக இரு மாநில அரசுகளும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும்வீரப்பனிடம் மீண்டும் எடுத்துரைக்க நக்கீரன் கோபால் மீண்டும் காட்டுக்குள்செல்வார்.
ஒருசில நாட்களில் அவர் காட்டுக்குள் செல்வார். ஆனால், தேதி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. நாளையே தீர்ப்புவரும் என்பதை எதிர்பார்க்கமுடியாது. வீரப்பனிடமிருந்து எந்த புதிய தகவலும்தமிழக அரசுக்கு வரவில்லை.
ராஜ்குமார் விவகாரத்தால் கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்குப் பாதுகாப்புகொடுக்கும்படி அம் மாநில முதல்வரைக் கேட்டுக் கொண்டேன். அவரும் தக்கபாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications