மருமகளை கொலை செய்த கோவில் குருக்கள்
சென்னை:
ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை அயர்ன் பாக்ஸால் உடம்பில் சூடு போட்டு கொலை செய்த கோவில் குருக்கள் கைது செய்யப்பட்டார். தந்தையைகாப்பாறுவதற்காக இந்தக் கொலையை மறைந்த மகனும் கைது செய்யப்பட்டார்.
சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவர் உமாபதி குருக்கள் (58). இவர் வண்டலூர் அருகே உள்ள இரணியம்மன்கோவில் குருக்களாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.
மூத்த மகன் கார்த்திக் (27) என்பவருக்கும், வேதாரண்யம் விஸ்வநாத குருக்கள் மகள் தனலட்சுமிக்கும் கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி திருமணம்நடந்தது. கார்த்திக் பெருங்களத்தூர் சூரத்தம்மன் கோவில் அர்ச்சகராக இருக்கிறார்.
உமாபதி குருக்கள் 58 வயதானாலும் ஆஜானுபாகுவாக இருப்பார். சபலப் புத்தி கொண்ட இந்த குருக்களுக்கு, மருமகள் மீது கண். மகளாக கருத வேண்டியதனலட்சுமியிடம் சபலத்தோடு பேசி வந்தார்.
மாமானார் தானே என்று மரியாதையுடன் அதை மனதில் கொள்ளாமல் இருந்த தனலட்சுமியிடம் ஒரு நாள் வரம்பு மீறினார். மாமானாரின் கொடியஎண்ணம் புரிந்த அப்பெண், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடோடி வந்து கட்டிய கணவரிடம் விஷயத்தை சொன்னார்.
ஆனால், கணவர் கார்த்திக் இதை போய் தந்தையிடம் எப்படி கேட்பது என்று நினைத்துக் கொண்டு சும்மா இருந்து விட்டார். இதையும் உமாபதி குருக்கள்தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் ஒரு நாள் கார்த்திக் வெளியூர் சென்று விட்டார். தனலட்சுமியை அடைய நேரம் பார்த்துக் கொண்டிருந்த உமாபதி குருக்களுக்கு யோசனைஉதயமானது.
வீட்டில் இருந்த தனது மனைவி, மகன், மற்றும் மகள்களை ஆளுக்கொரு வேலை கொடுத்து வெளியே அனுப்பி விட்டார். மருமகள் மட்டும் தனியாகஇருப்பது போல் பார்த்துக் கொண்டார்.
ஆனால், அவரும் கோவிலுக்கு செல்வது போல் கிளம்பி விட்டார். ஆனால், கோவிலுக்கு போன வேகத்தில் வீட்டிக்கு திரும்பி வந்தார். அந்தநேரத்தில் மாமனாரை வீட்டில் பார்த்ததுமே மருமகளுக்கு விஷயம் புரிந்து போனது. பதட்டத்தோடு காணப்பட்டார்.
உமாபதி குருக்கள் விடவில்லை. மருமகளிடம் பேசிப் பார்த்தார். கெஞ்சிப் பார்த்தார். அவர் மறுக்கவே பலவந்தத்தில் இறங்கினார். அதிலும் அவரதுஎண்ணம் ஈடேறவில்லை. கற்பை காப்பாற்ற மாமனாருடன் போராடினார் மருமகள். கடைசியில் தோற்றுப் போன குருக்கள், இனிமேல்தனலட்சுமியை உயிருடன் விட்டால் ஊர் முழுக்க தனது பெயர் நாறி விடும் என்று பயந்தார்.
அந்த பயம், ஆசைக்கு இணைந்த மறுத்ததால் ஏற்பட்ட வெறியும் சேர்ந்து கொள்ள, கோவில் குருக்கள் கொலைக் குருக்களாக மாறினார்.ஆவேசத்தோடு மருமகள் கழுத்தை கயிற்றால் நெரித்துக் கொன்றார். பின்னர் தடயம் தெரியாமல் இருப்பதற்காக இஸ்திரி பெட்டியை (அயர்ன் பாக்ஸ்)நன்றாக சூடேற்றி மருமகள் கழுத்தில் வைத்து தேய்த்தார்.
கழுத்துப் பகுதியே ரத்தக் களறியானது. உடலில் பல இடங்களில் இஸ்திரி போட்டார், கரன்ட் ஷாக்கால் மருமகள் இறந்து போய் விட்டார் என்று கதைகட்டி விடலாம் என்ற திட்டத்தோடு.
கச்சிதமாக எல்லா வேலைகளையும் செய்து விட்டு, கதவில் ஒரு சின்ன ஓட்டை போட்டு உள்தாழ்ப்பாள் போட்டு விட்டு வெளியேறி விட்டார்.
மீண்டும் கோவிலுக்குப் போய் விட்டு வழக்கம் போல் வீடு திரும்புவது போல் திரும்பினார். வழியில் மகனும் வந்து சேர இருவரும் வீட்டுக்குவந்தபோது விஷயம் தெரிந்து அதிர்ச்சி அடைந்தது போல் நடித்தார். ஆனால், மகனுக்கு தந்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவமானத்தை எண்ணிமறைத்துக் கொண்டார்.
தனலட்சுமியின் பெற்றோர் விடவில்லை. உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததை பார்த்து திடுக்கிட்ட அவர்கள் கொலை தான் என்று போலீசில்புகார் கொடுத்தனர். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் குருக்கள் சிக்கிக் கொண்டார்.
அவரது காமவெறி தான் மருமகளின் கொலைக்கு காரணம் என்பதை காட்டிக் கொடுக்க ஒரு கடிதம் உதவியது என்று மாவட்ட போலீஸ்கண்காணிப்பாளர் குணசீலன் தெரிவித்தார். அந்த கடிதத்தை குருக்களின் குடும்பத்தினர் தான் எழுதியிருக்க வேண்டும் என்பதை அதில் உள்ள உண்மைகளை வைத்துதெரிந்து கொண்டோம் என்றார் அவர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications