பா.ம.க. தொண்டர்கள் வன்முறை-பஸ் எரிப்பு
பெரம்பலூர்:
கட்சி நிறுவனர் ராமதாஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து தமிழகம்முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் திங்கள்கிழமை வன்முறையில்ஈடுபட்டனர்.
புதுவை அருகே ஞாயிற்றுக்கிழமை காரில் சென்று கொண்டிருந்த ராமதாஸ் மீது சிலர்கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாகராமதாஸ் தப்பினார்.
ராமதாஸ் மீது நடத்தப்பட்ட இத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராமதாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும்பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை புறநகர் பகுதியான பெருங்குடியில் திங்கள்கிழமை அதிகாலை அரசு பஸ்ஸைவன்முறையாளர் தீ வைத்துக் கொளுத்தினர். இதில் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.
பஸ்ஸில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கச் சொல்லிவிட்டு அவர்கள்பஸ்ஸுக்குத் தீவைத்தனர். இதனால், பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை.
தமிழகத்தின் பல இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் வாகனங்கள் மீதுஅவர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். குறிப்பாக பெரம்பலூர் மற்றும் கடலூர்மாவட்டங்களில் அவர் அதிக வன்முறையில் ஈடுபட்டனர்.
சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டதால் இரு மாவட்டங்களிலும் உள்ள பலஇடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆண்டிமடம், ஜெயங்கொண்டம்,மீன்சுருட்டி பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
சாலை மறியலால் சென்னை-கும்பகோணம் சாலையில் பாதிக்கப்பட்ட போக்குவரத்துஅரியலூர் மற்றும் பெரம்பலூர் வழியாகத் திருப்பிவிடப்பட்டது.
பாமகவினரின் கல் வீச்சில் 7 பஸ்கள், 6 லாரிகள், ஒரு டிராக்டர் உள்பட மேலும் பலவாகனங்கள் சேதமடைந்தனர். பல வாகனங்களின் டயர்களில் இருந்து அவர்கள்காற்றைப் பிடுங்கிவிட்டதால் அவை நடுவழியிலேயே நின்றன. இதனாலும்போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஆண்டிமடத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் 4 பஸ்களைச்சிறைப்பிடித்து வைத்துள்ளது.
வன்முறைச் சம்பவங்களை அடுத்து பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில்போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு மாவட்டங்கள் முழுவதும்போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அருணாசலம் மீன்சுருட்டியில்முகாமுட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறார். தற்போதுநிலைமை கட்டுக்குள் இருப்பாத அவர் தெரிவித்தார்.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனே கைதுசெய்யப்படுவார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கருணாநிதி கண்டனம்:
இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மீது நடத்தப்பட்டதாக்குதலுக்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. மயிரிழையில் அவர்உயிர்தப்பியது மகிழ்ச்சியளிக்கிறது.
வன்முறை என்ற பெயரில் அரசியல் நடவடிக்கைகளை கட்சிகள் மேற்கொள்வதுஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றுஅறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே?












Click it and Unblock the Notifications