ராமதாஸைக் கொலை செய்ய முயற்சி?
புதுவை:
புதுவை அருகே பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்ற கார் மீது தாக்குதல் நடந்தது. அவர் காயம் எதுவும் இன்றிஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
புதுவை ஏம்பலம் தொகுதியில் கொடி ஏற்றுவதற்காக பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடலூரில் இருந்து காரில் வந்தார்.
மாலை 6 மணிக்கு அங்கு கொடி ஏற்றி வைத்து விட்டு கரிக்கலாம்பாக்கத்துக்கு கொடி ஏற்ற சென்றார்.
அவரது கார் அபிஷேகப்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர்உருட்டுக்கட்டை, தடி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் திரண்டு நின்றனர்.
அபிஷேகப்பாக்கத்தில் ராமதாஸ் கொடியேற்ற முயன்றபோது அவரை வழிமறித்து கொடியேற்ற விடாமல் தடுத்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் டாக்டர் ராமதாஸ் வந்த கார் மீதும், அவருக்குப் பின்னால் வந்தகார் மீதும் சராமரியாகக் கற்கள் வீசப்பட்டன.
டாக்டர் ராமதாசைக் காப்பாற்ற முயன்ற அவரது பாதுகாவலர் சண்முகம் இத்தாக்குதலில் பலத்த காயமடைந்தார். டாக்டர் ராமதாஸ் வந்த கார்சின்னாபின்னமாக நொறுங்கியது. அவர் உடனடியாக தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு பாதுகாப்பாக புதுவை வந்து சேர்ந்தார். இச்சம்பவத்தில்சுமார் 10 க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.
கடையடைப்பு:
இச்சம்பவத்தின் எதிரொலியாக அபிஷேகப்பாக்கத்தில் சாலைமறியலும், கடையடைப்பும் நடந்தது. அப்பகுதி வழியே சென்ற 20 க்கும் மேற்பட்டபஸ்கள் கல்வீசித் தாக்கப்பட்டன.
இதில் 3 போலீஸ்காரர்களும் காயமடைந்தனர். மேலும் இச்சம்பவத்தால் புதுவை-கடலூர் ரோட்டில் வாகன போக்குவரத்து அடியோடுபாதிக்கப்பட்டது.
புகார்:
இச்சம்பவத்தையடுத்து புதுவை ஐ.ஜி. அலுவலகத்துக்குச் சென்ற ராமதாஸ் அபிஷேகப்பாக்கத்தில் நடந்த சம்பவம் என்னை திட்டமிட்டு கொல்ல நடந்தசதியாகும். இச்சம்பவத்தின் பின்னணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்கிறார்கள் என்று கருதுகிறேன் என்று புகார் கொடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications