மதுரையில் பதற்றம் - 2 பஸ்கள் எரிப்பு
மதுரை:
மு.க.அழகிரி மீது தி.மு.க.நடவடிக்கை எடுத்துள்ளதைக் கண்டித்து மதுரையில் 2 பஸ்கள் எரிக்கப்பட்டன. போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
மு.க அழகிரியுடன் தி.மு.க.வினர் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொலைக்காட்சியில் செய்தி வெளியானதும் மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென்று பதற்றம் ஏற்பட்டது. 10 மணிக்கு ஒருகும்பல் வன்முறையில் ஈடுபட்டது.
அவனியாபுரம் பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது.
வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனி அருகே இச்சம்பவம் நடந்தது. பஸ்சை மறித்து அக்கும்பல் டிரைவரை வெளியே இழுத்துப் போட்டு அடித்து உதைத்தது.
இதையடுத்து, பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். பின்னர் பஸ் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் பஸ்சின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது.
அதே போல், அவனியாபுரம் பை பாஸ் ரோட்டில் இன்னொரு பஸ்சை வன்முறைக் கும்பல் அடித்து நொறுக்கியது. அதற்குள் சம்பவ இடத்திற்குபோலீஸார் வந்து விட்டதால் பஸ் எரிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது.
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வந்த ஒரு அரசு பஸ்சை வன்முறைக்கும்பல் தீ வைத்து எரித்தனர். பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் அனைவரும்பதறி ஓடினர்.
இச்சம்பவத்தால் தென் மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது. மதுரைக்கு எந்த பஸ்சும் வரவில்லை. மதுரையிலிருந்தும் எந்தபஸ்சும் வெளியூர்களுக்குப் புறப்பட்டுச் செல்லவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications