ரூ. 1,100 கோடியில் எச்.எம்.டி தொழிற்சாலை மறுசீரமைப்பு
கோவை:
எச்.எம்.டி நிறுவன மறு சீரமைப்பிற்காக ஆயிரத்து 100 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் தவணையாக ரூ.250 கோடி ரூபாய்வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் மனோகர் ஜோஷி தெரிவித்தார்.
கனரக மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் மத்திய இணை அமைச்சர் மனோகர் ஜோஷி, புதன்கிழமை கஞ்சிக் கோட்டில் நடக்கும் உலகளாவியகருத்தரங்கில் கலந்து கொள்கிறார்.
இதற்காக செப்டம்பர் 19ம் தேதி கோவை வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நஷ்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள் குறித்த வெள்ளை அறிக்கை அக்டோபர் மாதம் மத்திய அரசிடம் அளிக்கப்படும்.
தற்போது 7 பெரும் தொழிற்சாலைகள் நிதி நெருக்கடியில் உள்ளன. 30 தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. 7 தொழிற்சாலைகளை மூடதொழிற்சாலைகளின் மறு சீரமைப்பு மற்றும் நிதி நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
லாபத்தில் இயங்கும் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு குறித்த பரிசீலனை செய்யப்படும். நஷ்டத்தில் இயங்கும்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து பரிசீலனை செய்வது கடினமே
மூ டப்படும் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தானாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு சுயதொழில் தொடங்க பயிற்சியும் வழங்கப்படும்.
ஊட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. இந்த தொழிற்சாலையை தொடர்ந்து நடத்தவும்மறு சீரமைப்பிற்கு உதவவும் ரூ. 150 கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டுத் தொகையை கடனாக வழங்குவதா அல்லது மானியமாக அளிப்பதா என்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. பின்னர் இதுமத்திய அமைச்சரவையின் அனுமதிக்காக வைக்கப்படும்.
ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் நிறுவன (எச்.எம்.டி) மறு சீரமைப்பிற்கு அரசு ஆயிரத்து 100 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. ஏற்கனவே ரூ. 250 கோடிவழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தத் தொழிற்சாலை லாபகரமானதாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் மனோகர் ஜோஷி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications