ஹாக்கி: தென் கொரியாவுடன் இந்தியா நாளை மோதல் - வென்றால் அரையிறுதி
சிட்னி:
ஹாக்கிப் போட்டியில் ஆண்களுக்கான பி பிரிவு ஆட்டத்தில் இந்தியாவும் தென்கொரியாவும் வியாழக்கிழமை மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதியில் விளையாடும் தகுதியைஇந்தியா பெறும். ஏற்கெனவே இரண்டு ஆட்டங்கள் மூலம் இந்தியாவுக்கு 4 புள்ளிகள்கிடைத்துள்ளன.
இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில்தோற்கடித்தது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் 2-2என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.
1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில்தான் இந்திய ஹாக்கி அணி கடைசியாகதங்கப் பதக்கம் வென்றது. அதற்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக அரையிறுதிஅளவுக்குக் கூட இந்திய ஹாக்கி அணி முன்னேறவில்லை.
தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணிஅரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். தென் கொரியா தனது முந்தைய இருஆட்டங்களிலும் டிரா செய்து 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
இந்தியாவுடனான ஆட்டத்தில் தென் கொரியா தோற்றால் அரையிறுதிக்கு நுழையும்வாய்ப்பு பறிபோகும். ஆகவே, இந்தியாவை எப்படியாவது வெல்லவேண்டும் என்றுஅந்த அணி கடுமையாகப் போராடும்.
அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு நுழைய கிடைத்துள்ளவாய்ப்பைப் பயன்படுத்தி தென் கொரியாவைத் தோற்கடிக்கவேண்டும் என்று இந்தியஅணியினர் விளையாடுவார்கள்.
இந்தியாவும் தென் கொரியாவும் கடைசியாக பாங்காக் ஆசியப் போட்டியில் இறுதிஆட்டத்தில் மோதின. இதில் டை பிரேக்கர் மூலம் இந்தியா வெற்றி பெற்றுதங்கப்பதக்கம் வென்றது. அந்த வெற்றியை அடுத்தே சிட்னி ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள இந்தியா தகுதி பெற்றது.
தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நிலைமைக்குத் தக்கபடி இந்திய வீரர்கள்விளையாடி வெற்றி பெற முயலுவார்கள். ஏற்கெனவே நடந்த இரு ஆட்டங்களில்தன்ராஜ் பிள்ளை, முகேஷ் குமார் இருவரும் சிறப்பாக விளையாடினர். தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் அவர்கள் சிறப்பாக விளையாடி அணிக்குவெற்றி தேடித் தருவார்கள் என்றார் அணிப் பயிற்சியாளர் பாஸ்கரன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications