மடிப்பிச்சை கேட்கிறார் மூப்பனார்: வாழப்பாடி சூடு
சென்னை:
தமிழ்மாநில காங்கிரஸ் நடத்தவிருக்கும் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு மக்கள்ஆதரவு கிடைக்காது என தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திகருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தலைமையில் அக்கட்சியினர் 27-ம் தேதிசிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டம் மக்கள் ஆதரவைப்பெறாது என வாழப்பாடி ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் தழுவிய அளவில் அறவழிப் போராட்டம் நடத்த இருப்பதாக மூப்பனார்கூறியுள்ளார். ஆட்சியில் நீடிக்க கருணாநிதிக்கு தகுதி இல்லை என மிகப் பெரியபொய் ஒன்றை கூறியுள்ளார்.
சென்ற தேர்தலில் மக்கள் கருணாநிதிக்கு பெரும் அளவில் வாக்களித்து அவரைஆட்சியில் அமர்த்தினார்கள். கருணாநிதிக்கு முதல்வர் பதவியில் இருக்க தகுதிஇருக்கிறதா இல்லையா என கூற வேண்டியவர்கள் தமிழக வாக்களர்கள்தான்.மூப்பனார் இல்லை.
தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவியில் இருக்கத் தகுதியில்லைஎனக் கூறி மூப்பனார் தமிழக மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார்.
ஏழை எளிய மக்களுக்காக போராடுவதாக கூறும் மூப்பனாரின் கடந்த காலவரலாறைப் பார்த்தால் அவர் எந்த அளவுக்கு ஏழை மக்களுக்காக பாடுபட்டிருக்கிறார்எனப் புரியும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மூப்பனார் மூன்றாவது அணி அமைப்பது தேர்தலில்போட்டியிட்டார். அனைத்து தொகுதிகளும் இந்த அணி தோல்வியடைந்ததுமட்டுமல்ல.
30-க்கும் அதிகமான தொகுதிகளில் இந்த அணி டெபாசிட் தொகையையும் இழந்தது.இப்படி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட மூப்பனார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டகருணாநிதிக்கு பதவியில் நீடிக்க தகுதியில்லை என கூறுகிறர்.
ஊழலையும், மதவாத்தையும் எதிர்ப்பதாகக் கூறி தனிக் கட்சி தொடங்கிய மூப்பனார்இப்போது ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொண்டு ஆட்சியில் பங்கு வேண்டும் எனமடிப்பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இவருக்கு கொள்கை என எதுவும் கிடையாது. மூப்பனாரின் ஒரே குறிக்கோள்எப்படியாவது முதல்வராக வேண்டும் என்பதுதான். அவர் தனது கட்சியினரிடையேசெல்வாக்கை இழந்து வருகிறார்.
அவர்களை திசை திருப்பவே இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுகிறார். ஆனால்இதை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என அந்த அறிக்கையில் வாழப்பாடி ராமமூர்த்திதெரிவித்துள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications