"தொண்டர்களே...அமைதியாக இருங்கள்"
திண்டிவனம்:
பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தெடர்பாக திண்டிவனத்தில் அவர் அளித்த பேட்டி:
விடுதலை சிறுத்தைகள் அமைப்பு பற்றியும், அவர்கள் செய்து வரும் வன்முறைச் செயல்கள் பற்றியும் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் எடுத்துக் கூறினேன்.
புதுவையில் என் மீது நடந்த தாக்குதல் குறித்து முதல்வர் கருணாநிதி என்னிடம் விசாரித்தார்.
மேடைப் பேச்சில் தாக்கி வந்தவர்கள் தற்போது நேரடியாகத் தாக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தத் துணிச்சலுக்குக் காரணம் அவர்களைக்கட்டுப்படுத்த அரசு முன்வராததும், அவர்களுக்கு ஆதரவு தரும் சில கட்சிகள் இருப்பதாலும்தான்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன் மேல் 60 எப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டுள்ளன. இது மட்டும் போதாது. அவர் மேல்நடவடிக்கை எடுத்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்றார் ராமதாஸ்.
அதன்பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்திலும், புதுவையிலும் பேரூந்துகளை எரிப்பது, அடித்து நொறுக்குவது, வழிப்பறி செய்வது, காலனி வீடுகளுக்குத் தீ வைப்பது போன்ற செயல்களில்ஈடுபட்டு பா.ம.க.மீது பழியைப் போட்டு குளிர்காயப் பார்க்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர்.
அவர்களது நடவடிக்கைகளைப் போலீஸார் உன்னிப்பாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சமயத்தில் பா.ம.க.யினர் எந்த வன்முறைச் சம்பவத்திலும் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும். காவல்துறையினருக்கு பாட்டாளி மக்கள்கட்சியினர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்ற தனது அறிக்கையில் கூறியுள்ளார் ராமதாஸ்.
விழுப்புரத்தில் ராமதாஸ்:
தமிழகத்தில் சில இடங்களில் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த விதத்திலும் பொறுப்பல்ல. விழுப்புரம் அருகே மேல்பாதி என்ற இடத்தில் திங்கள்கிழமை இரவு பஸ்சில்பயணம் செய்த புதுவையைச் சேர்ந்த பெண் ரேவதி, வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டது எனக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த வன்முறைச் சம்பவங்களுக்கெல்லாம் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர்தான் காரணம். பா.ம.க.என்ற போர்வையில் அவர்கள்இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications