40,000 கர்நாடகத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்
நினைத்தேன் எழுதுகிறேன்
இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர் அமெரிக்காவிலிருந்து அனுப்பிய செய்தி ஒன்றில், கிளின்டணுக்கு நியூயார்க்கில் அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைவிவரித்திருக்கிறார் ...கிளின்டண் தனது ஓட்டலிலிருந்து புறப்படும் போதெல்லாம், அதைச் சுற்றியுள்ள தெருக்களில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
அது மட்டுமல்ல, பாதசாரிகள் கூட தெருவைக் கடக்கக் கூடாது. ஆறு போலீசார் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள். நான்கு போலீஸ் கார்கள்செல்கின்றன; கிளின்டண் செல்கிற காரைப் போன்று மூன்று கார்கள் செல்கின்றன. (அவர் எந்தக் காரில் செல்கிறார் என்பது புரியாமல்இருப்பதற்காக இந்த ஏற்பாடு); இதைத் தவிர, ஆறு கார்கள், ஆறு வேன்கள், ஓர் ஆம்புலன்ஸ் வண்டி, மேலும் எட்டு மோட்டார் சைக்கிள்போலீசார் ... ஆகியோர் அந்த ஊர்வலத்தில் செல்கிறார்கள்.
நியூயார்க் மக்கள் இந்த ஏற்பாடுகளினால் கோபமடைகிறார்கள். ஆனால் அதுபற்றி கிளின்டண் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
இவ்வாறு கிளின்டனின் ஏற்பாடுளை வர்ணித்திருக்கிற நிருபர், இதுபற்றி சொல்கிற கருத்து நியாயமானது. அவர் சொல்கிறார். : ஏன் அமெரிக்காவில்இருப்பதுபோல் இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை ? அமெரிக்க ஜனாதிபதியின் உயிருக்கும்தான் ஆபத்து இருக்கிறது.
ஆனால் அங்கு கண்ணுக்குத் தெரியாத மாதிரி, மக்களை தொந்தரவு செய்யாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று கூறி,இந்தியாவில் முக்கியஸ்தர்களுக்குத் தரப்படுகிற பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்டித்து விமர்சிப்பவர்கள் பலர் உண்டு.
கிளின்டனுக்குச் செய்யப்பட்ட ஏற்பாடுகளைப் பார்க்கும் போது, இந்த மாதிரி சொல்கிறவர்களை நினைத்தால் சிரிப்பாகத்தான் வருகிறது ...
அமெரிக்காவில் செய்யப்படுகிற பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் நவீனமாக இருக்கும் என்பதால், நம் நாடு மாதிரி ஆர்ப்பட்டமாக இருக்காதுஎன்றுதான் நானும் நினைத்திருந்தேன்.
இந்தச் செய்தியைப் படித்த பிறகுதான், விஷயம் புரிகிறது. வீட்டுக்கு வீடு வாசல்படி, நாட்டுக்கு நாடு பாதுகாப்புச் சுமை!
இது சமாளிப்பு!
அமெரிக்காவில் இந்து அமைப்புகள் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் வாஜ்பாய், என்றுமே நான் ஒரு ஸ்வயம்சேவக்தான் என்று கூறியதுபலத்த சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.
இந்துக்கள் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்வதா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருகிறது. கிறிஸ்துவர்கள் போன்ற மைனாரிட்டி மக்கள்சார்பான அமைப்புகள் நடத்துகிற கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டால், அதற்கு ஆட்சேபம் இருக்காது.
இந்துக்கள் நடத்துகிற கூட்டம் என்றால் ஆட்சேபம் எழுகிறது,. இது நமது மதச் சார்பின்மையின் வினோதங்களில் ஒன்று.
இது ஒரு புறமிருக்க, ஸ்வயம்சேவக் பேச்சு எழுப்பிய சர்ச்சையைப் பார்த்தவுடன் வாஜ்பாய், நான் ஸ்வயம்சேவக் என்று சொன்னது தானாகவே முன் வந்துசேவை செய்கிறவன் என்ற அர்த்தத்தில் தான். தேசத்திற்கு சேவை செய்வதில் நான் முதல் ஆளாக நிற்பேன் என்ற அர்த்ததில்தான் பேசினேன் ... என்றுவிளக்கம் அளித்து விட்டார். உண்ாமையைச் சொல்வதென்றால், இது விளக்கமல்ல , சமாளிப்பு.
அரசியல்வாதிகளுக்கு ஒரு பலவீனம் உண்டு. எந்த இடத்தில் பேசுகிறார்களோ, அதற்கு தக்கவாறு எதையாவது சொல்லி, கை தட்டல் வாங்கி விடவேண்டும் என்ற துடிப்பு அவர்களுக்கு உண்டு.
வட இந்தியத் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால், தட்டுத்தடுமாறி வணக்கம்என்றாவது ஆரம்பித்து, தமிழர்களை திருப்தி செய்ய முற்பாடுவார்களே,அந்த மாதிரி. இதே ரீதியில்தான் வாஜ்பாய், தான் பேசிய இடத்தில் ஸ்வயம்சேவக் என்று தன்னை வர்ணித்துக் கொண்டார். அது சர்ச்சையைத் கிளப்பியதுஎன்றவுடன் சமாளிக்கப் பார்க்கிறார்.
ஒரு மனிதனுக்கு தன்னுடைய கருத்தில் அல்லது நிலைப்பாட்டில் ஒரு நிச்சயமான நம்பிக்கை இருந்தால், இந்த மாதிரி பிரச்சனைகள் எழாது. சில இடங்களில் ஒருநிலைப்பாடு , வேறு சிலர் மத்தியில் ஒரு மாறுதலான அணுகுமுறை ... என்றெல்லாம் இருந்தால் இப்படித்தான் சமாளிப்புகள் தேவைப்படும்.
வாஜ்பாய்க்கு ஆர்.எஸ்.எஸ்.சின் ஆதரவும் வேண்டும்; அதே சமயத்தில் தனக்கு தர்மசங்கடம் ஏற்படக்கூடிய சமயங்களில் ஆர்.எஸ்.எஸ். மரியாதையாகஒதுங்கி நிற்கவும் வேண்டும்.
இப்படி ஒரு அணுகுமுறையை அவர் வைத்திருப்பதால்தான் இந்தப் பேச்சும், அதற்கு ஒரு சமாளிப்பும் தேவைப்பட்டிருக்கின்றன. அவருக்குத் தேவை நெஞ்சத் துணிவு.












Click it and Unblock the Notifications