சேலத்தில் மீண்டும் கன்னட எதிர்ப்பு நோட்டீஸ்கள்
சேலம்:
கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் படும் கஷ்டங்களை 6 பக்க நோட்டீஸ்களில் அச்சடித்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர் வீரப்பனின்ஆதரவாளர்கள்.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், தமிழ் தீவிரவாதிகள் 5 பேர் மற்றும் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 121 பேரை விடுவிக்கவேண்டும் என்று வீரப்பன் நிபந்தனை விதித்துள்ளான்.
இரு மாநில அரசுகளும் இந்த நிபந்தனைப்படி, தடா கைதிகள் உள்பட பிற கைதிகளை விடுவிக்க ஒப்பதல் அளித்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட், கர்நாடகசிறையிலுள்ள வீரப்பனின் கூட்டாளிகளையும், தமிழக சிறைகளில் உள்ள நக்சலைட்டுகளையும் விடுவிக்க தடை விதித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த வீரப்பனின் ஆதரவாளர்கள் சேலம், மேட்டூர், தாரமங்கலம், நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் நடிகர் ரஜனிகாந்த்தைத் தாக்கி 6பக்க நோட்டீஸ்களை ரகசியமாக அச்சடித்து வெளியிட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது. கர்நாடக சிறையில் ஆண்டுக்கணக்கில் வாடும் தமிழர்கள் குறித்து யாரும் குரல் கொடுக்காமல், ஒருகன்னட நடிகர் சிறைப்பட்டதும் குரல் கொடுக்கிறார்களே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது இது. ராஜ்குமாருக்காக குரல் கொடுத்தவர்களைத்திட்டியும் அந்த நோட்டீஸில் வாசகங்கள் உள்ளன.
நோட்டீசின் முதல் பக்கத்தில் கர்நாடகத்தில் கதறும் தமிழர்கள் என்ற தலைப்பில் கட்டுரை ஆரம்பமாகிறது. கர்நாடக சிறையில் தமிழர்கள் படும்அவஸ்தை, பெண்களை மற்றவர்கள் கண் எதிரிலேயே கற்பழித்தல் கொடூரமான செயல்கள் குறித்து அச்சடிக்கப்பட்டுள்ளது.
கட்டுரையின் இறுதியில், வீரப்பன், சில வருடங்களுக்கு முன் 9 கன்னடர்களைக் கடத்தினான். அப்போது கர்நாடக அரசு, தனது அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்து விட்டு, அவர்களை மீட்பதையே முதல் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டது.
தற்போது வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள ராஜ்குமார் என்ற ஒருவருக்காகப் போராடும் தமிழக-கர்நாடக அரசுகள், கர்நாடக சிறையில்அடைக்கப்பட்டுள்ள 130 கைதிகளை விடுவிப்பதில் மட்டும் தயக்கம் காட்டுவது ஏன்? அவர்களுக்காகக் குரல் கொடுக்காதது ஏன் என்று கேள்விஎழுப்பியுள்ளது.
நோட்டீசின் முடிவில், வள்ளுவன் மினி அச்சகம், மேச்சேரி என்ற முகவரியும் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதிகளில் வீரப்பனின் கூட்டாளிகளானநக்சல்கள், தமிழர் மீட்சிப்படை ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதைப் போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications