பஸ்களை எரிப்பவர்கள் பீடைகள் ..கருணாநிதி சாடல்
சென்னை:
பஸ் எரிப்பு, கல்வீச்சு போன்ற வன்முறையை தங்கள் கலாச்சாரமாக கொள்பவர்கள் இந்த சமுதாயத்தைப் பிடித்த பீடைகள் என்று அழகிரியையும், அவரதுஆதரவாளர்களையும் முதல்வர் கருணாநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கட்சிப் பத்திரிகையில், முதல்வர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
மதுரையில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தால்; இன்னும் அதிகமாக மீறுவோம் என்று ஆர்ப்பரித்துஒருசிலர் தங்களின் வீரத்தைப் பஸ்கள் மீது காட்டி வருகின்றனர்.
ஆளும் கட்சியினராயிற்றே என்று பாராமல் சட்டப்படி கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். இன்று வன்முறை அவர்களுக்கு உற்சாகமாகஇருக்கலாம். உடனிருந்து உசுப்பி விடுபவர்களுக்கும் குதூகலமாகத் தெரியலாம்.
வன்முறையில் ஈடுபடும் விலங்கு மன்றத்தினர் எதிர்க்கட்சியில் இருந்தாலும், தோழமைக் கட்சியில் இருந்தாலும், ஆளுங்கட்சியிலே இருந்தாலும்சட்டத்தின் மூலம் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்கள்.
இதில் எந்தவிதமான ஆசாபாசங்களுக்கும் இடமில்லை. அரசியலில், கல் எறிவதையும் வன்முறை சேட்டைகளையும் தங்களின் கலாச்சாரமாகக்கொள்பவர் யாராயினும் அவர்கள் இந்த சமுதாயத்தைப் பிடித்த பீடைகள், கொடியவர்கள், கண்டிக்கப்பட வேண்டியவர்கள், தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
அரசாங்க பஸ்கள் மீது வீசப்பட்ட ஒவ்வொரு கல்லும், பற்ற வைக்கப்பட்ட ஒவ்வொரு தீக்குச்சியும் பயணிகளின் கோபத்திற்கு உள்ளாகியவைமட்டுமல்ல; பாதிக்கப்பட்டவர்களின் சாபத்திற்கும் உள்ளாகியவையாகும். இன்னும் சொல்லப்போனால் என் இதயத்தை கிழிக்க எறியப்பட்டகற்கள், தீப்பந்தங்கள்.
1969ல் அண்ணா மறைவுக்கு பிறகு நான் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும்; அந்தப் பொறுப்புக்கு நான்தான் வரவேண்டுமென்று வாதிட்டு வென்றதந்தை பெரியார் என்னிடம் கூறிய அறிவுரை என்ன தெரியுமா?
""அண்ணா சொல்லிவிட்டுப் போன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டில் முதலிரண்டையும் விட மூன்றாவதாகச் சொன்ன கட்டுப்பாடு தான் கட்சிக்குமுக்கியம் என்பதை மறந்து விடாதே.
பெரியார் சொன்ன இந்த அறிவுரையை மதித்து நடப்பதும், மறவாமல் இருப்பதும்தான் கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் நல்லது என்பதைதிமுகவினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications