செய் நன்றி மறவாத மகேஸ்வரி
சென்னை:
தருமபுரியில் அதிமுகவினரால் எரிக்கப்பட்ட பஸ்சில் கருகி இறந்த மாணவி ஹேமலதாவின் சகோதரி உமா மகேஸ்வரி, தனது முதல் மாத சம்பளத்தைமுதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர்போராட்டம் நடத்தினர்.
உச்சகட்டமாக, தருமபுரியில் விவசாயக் கல்லூரி மாணவிகள் வந்த பஸ் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் ஹேமலதா உள்பட மூன்று மாணவிகள் எரிந்துபலியாயினர்.
மூன்று பேருடைய குடும்பத்தினுக்கும் அரசு வேலை வழங்கியது. ஹேமலதாவின் சகோதரி உமா மகேஸ்வரிக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவழங்கப்பட்டது.
ஒரு மாதத்திற்கு முன்பு பணியில் சேர்ந்த உமா மகேஸ்வரி தனது முதல் மாத சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார். வெள்ளிக்கிழமை முதல்வர்கருணாநிதியைச் சந்தித்த அவர் தனது ஊதியமான ரூ. 12,040 பணத்தை முதல்வரிடம் கொடுத்தார். தனக்கு வேலை வழங்கியமைக்காக நன்றியையும்தெரிவித்துக் கொண்டார்.
முதல் மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய உமா மகேஸ்வரியை முதல்வர் கருணாநிதி பாராட்டினார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications