தலைமலையில் தவம் இருக்கிறார் கோபால்
சென்னை:
வீரப்பனிடம் இருந்து அழைப்பு வருமா என்று தலைமலைப் பகுதியில் "தவம்இருக்கிறார் நக்கீரன் கோபால்.
சனிக் கிழமை மாலை வரை தகவலோ அழைப்போ வீரப்பனிடம் இருந்து வரவில்லை.
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட நால்வரை மீட்க நான்காவது முறையாககாட்டிற்குள் சென்றுள்ளார் அரசு தூதர் நக்கீரன் கோபால்.
அவர் சத்தியமங்கலம் சென்று காட்டுக்குள் நுழைந்து இரண்டு நாட்களாகி விட்டன.
சத்தியமங்கலம், ஆசனூர், தலைமலை காட்டுப் பகுதிகளில் மழை வெளுத்துவாங்குகிறது. இரவு பகலாக பெய்து வரும் பேய் மழை காரணமாக காட்டுக்குள் அங்கு,இங்கு என அசைய முடியாமல் அதே இடத்தில் காம்ப் போட்டுக் காத்திருக்கிறார்கோபால்.
அதற்கு மேல் ஒரு அடி கூட கோபாலால் எடுத்து வைக்க முடியாது. மழைக்குபயந்தல்ல ; அதற்கு மேல் காட்டுக்குள் நுழைய வேண்டுமானால் வீரப்பனின் அனுமதிகிடைத்த பிறகு தான் செல்ல வேண்டும்.
வீரப்பனிடம் இருந்து முதலில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியை கடந்து உள்ளேவரலாம் என்ற தகவல் வந்து சேரும்; அதன் பின்னர் அவன் தனது கூட்டாளியைஅனுப்பி தூதரை அவனது இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்வான்.
இப்போது வீரப்பனின் தகவலுக்காக காத்திருக்கும் கோபாலிடம் இருந்து தான் அவரதுநக்கீரன் அலுவலகத்திற்கு சனிக் கிழமை தகவல் வந்துள்ளது.
காட்டில் மழை பெய்து வருவதால் காட்டில் காத்திருக்கிறேன். இன்னமும் வீரப்பனிடம்இருந்து தகவல் இல்லை. மழை காரணமாக அவனால் தகவல் தர முடியவில்லை.
கடந்த முறை நான் வீரப்பனை சந்தித்தபோதே அடுத்த தடவை நீங்கள் வரும்போது 4நாட்கள் நடக்க வேண்டியதிருக்கும் என்று கூறியிருந்தான். எனவே ராஜ்குமாருடன்தொலை தூரத்திற்கு சென்று இருப்பான் என்று நினைக்கிறேன்.
அதுவும் அவனிடம் இருந்து தகவல் வர தாமதமாவதற்கான காரணம் என்றுசென்னையில் உள்ள தனது பத்திரிகை இணை ஆசிரியர் காமராஜிடம்தொலைபேசியில் கோபால் தெரிவித்துள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications