தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம்
சென்னை:
தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பேரணி நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள்அமைப்பின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் சனிக் கிழமை அவர் அளித்த பேட்டி:
பா.ம.க. தலைவர் ராமதாஸ் தாக்கப்பட்டதாக பரப்பப்பட்ட வதந்தியை தொடர்ந்து பா.ம.கவினர் வன்முறை வெறியாட்டம்நடத்தியுள்ளனர். 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமான பஸ்கள் கொளுத்தப்பட்டன.
இதை கண்டித்து அக்டோபர் 1ம் தேதி பாண்டிச்சேரியில் தோழமை கட்சிகளின் ஆதரவோடு கண்டன பேரணியும், பொதுக் கூட்டமும்நடத்தப்படும்.படுகொலை செய்யப்பட்ட 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
வன்முறையில் ஈடுபட்ட பா.ம.கவினர் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டிக்கிறோம்.
ராமதாசின் செல்வாக்கு சரிந்து வருகிறது. எனவே தனது தலைமையை நிலை நிறுத்திக் கொள்ளவும், தி.மு.க,. அ.தி.மு.க.புறக்கணிப்பில் இருந்து தப்பிக்கவும், வன்முறைகளை தூண்டுகிறார்.
பஸ்கள் எரிக்கப்பட்டதற்கான நஷ்டஈடு பணத்தை பா.ம.க.விடம் இருந்தும், தி.மு.க.விடம் இருந்தும் வசூலிக்க வேண்டும். இதைவலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து மாநிலம் முழுவதும் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரைகண்டனப் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications