மல்யுத்தம்: இந்தியாவின் சவாலைத் தொடங்குகிறார் குர்பிந்தர் சிங்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சவால் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. 63கிலோ எடைப் பிரிவில் (கிரெகோ-ரோமன்) அல்ஜீரியாவின் யாசீன் ஜாக்கீருடன்இந்தியாவின் குர்பிந்தர் சிங் மோதுகிறார்.
மல்யுத்தத்தில் இந்தியாவின் சார்பில் குர்பிந்தர் சிங் ஒருவர் மட்டும்தான்போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் குர்பிந்தர் சிங் கடந்த 4ஆண்டுகளாக தேசிய சாம்பியனாக உள்ளார். ஆனால், அல்ஜீரிய வீரருடனான மோதல்அவருக்குக் கடுமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இப் போட்டிப் பிரிவில்தான் 1952-ம் ஆண்டு ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குஹாக்கி தவிர, தனிநபர் பிரிவில் முதல் வெண்கலப் பதக்கம் கிடைத்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications