"கைத்தறி ஏற்றுமதி ரூ. 100 கோடியாக உயரும்
கோவை:
அடுத்த நிதியாண்டிற்குள் தமிழகத்தின் கைத்தறி ஏற்றுமதி ரூ. 100 கோடியாக உயரும்என தமிழக கைத்தறித் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
கோவையில் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) நடத்திய பாராட்டு விழாவில்கலந்து கொண்டு அமைச்சர் என்.கே.கே பெரியசாமி பேசியதாவது:
இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான் நபார்டு வங்கியின் மூலம் 56 சதவீதநிதியுதவியை நெசவுக்காகப் பயன்படுத்தி வருகிறது. இங்கு இந்த நெசவு, கூட்டுறவுஅமைப்பில் செயல்படுவதால் நிதி உதவி பெறுவதில் சிக்கல் எதுவுமின்றி பெறஇயலுகிறது.
தமிழகத்தில் கடந்த-98ம் ஆண்டு வரை கைத்தறித் துணிகளின் ஏற்றுமதி நாலரைகோடியாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு இது 40 கோடி ரூபாயாக உயர்ந்தது. நடப்புநிதியாண்டில் 40 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த ஏற்றுமதி அடுத்த ஆண்டிற்குள்100 கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கிறோம். அதற்கேற்ற வர்த்தகவிசாரணைகள் கைத்தறித் துறைக்கு கிடைத்து வருகிறது.
தமிழகம் மட்டுமே ஜவுளிக் கொள்கையை ஏற்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. மத்திய அரசு கூட இன்னும் புதிய ஜவுளிக் கொள்கை எதையும்அறிவிக்கவில் என்றார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு கைத்தறி ஆணையாளர் டேவிதார் கூறுகையில், கடந்த 1969ம்ஆண்டு கைத்தறி கூட்டுறவுத் துறை செயல்பட்டு வருகிறது. இதுவரை நஷ்டத்தில்இயங்கி வந்த கூட்டுறவு மில்கள் சில தற்போது லாபத்தில் செயல்படுகின்றன.
அதிகாரிகளின் அலட்சியம், மற்றும் பொறுப்பற்ற மனப்பான்மையால் இப் பிரச்னைவந்துள்ளது. சர்வதேசப் பொருளாதாரத் தாராளமயமாக்கலின்போது ஏற்படும் கடும்போட்டியைச் சமாளிக்கத் தேவையான தரக் கட்டுப்பாடு நடவடிக்கையை அரசுமேற்கொண்டு வருகிறது என்றார்.
விழாவில், சைமாத் தலைவர் மாணிக்கம் ராமசாமி வரவேற்றார். முன்னாள் சேர்மன்கிருஷ்ணராஜ் வானவராயர், கருத்துக் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications