தமிழகத்தில் நக்சலைட்டுகள் மாநாடு?

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் அடுத்த மாதம் நக்சலைட்டுகளின் மாநாடு நடைபெறும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தியை காலைக் கதிர் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. ஆந்திர நக்சலைட் தலைவர் ரிஷி காலைக்கதிருக்கு விசேஷ பேட்டி அளித்துள்ளார். அதில் அவர்,

கொலையும், கொள்ளையும் போரடிக்கத் தொடங்கி விட்டது. எங்கள் இயக்கத்தின் அடுத்த இலக்கு நக்சலைட்டுகள் ஆட்சி. இதற்காக நாட்டில்சிதறிக் கிடக்கும் நக்சல் இயக்கங்களை ஒருங்கிணைத்து தேசிய அளவில் மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துகிறோம், என்றார்.

வீரன் ரமணா நக்சலைட் மக்கள் போர்ப்படை என்ற இயக்கத்தின் தலைவராக இருப்பவர் ரிஷி. இவர் காலைக்கதிர் நாளிதழ் நிருபருடன் பேசுவதற்குதொலைபேசியில் அழைப்பு விடுத்தார். அதன்படி அவரது இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட காலைக்கதிர் நிருபருக்கு ரிஷி அளித்த விசேஷ பேட்டி:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில்லை. பன்றியும். மனிதனும் ஒன்றாக வாழ்க்கை நடத்தவேண்டிய இழி நிலை நாடு முழுவதும் உள்ளது.

பத்து வயது சிறுமிகள் கூட கட்டாய விபசாரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். தேர்தல் சமயத்தில் ஐம்பது அல்லது நூறு ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கிவெற்றி பெறும் பெரிய மனிதர்களை அடுத்து ஐந்து வருடம் கழித்துத்தான் தொகுதிப் பக்கம் பார்க்க முடியும். ஐந்து வருடத்தில் அந்த பெரிய மனிதர்கோடீஸ்வரர் ஆகிவிடுகிறார்.

ஆதி திராவிடர்களுக்கு இலவசமாக அரசு நிலம் கொடுக்கிறது. ஆனால், இந்த நிலத்தை வாங்க தாசில்தார் முதல் கடைநிலை ஊழியர் வரை லஞ்சம்கொடுக்க வேண்டும். அப்படி லஞ்சம் கொடுக்காவிட்டால், நீ ஆதிதிராவிடனே இல்லை என்று தாசில்தார் சர்டிபிகேட் கொடுத்துவிடுவார்.இது தான்இன்றுள்ள நிலைமை.

ஆதிதிராவிடப் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். மற்றவர்களின் காமவெறிக்கு இரையாகின்றனர். இன்றும் கூட ஆதிதிராவிடர்கள்கொத்தடிமைகளாக வாழ வேண்டிய நிலை உள்ளது.

நாட்டில் மிகப் பெரிய திருடன் போலீஸ்காரன்தான். தப்புகளைச் செய்ய தூண்டி விடுவதும் அவர்கள்தான். கள்ள சாராயம் காய்ச்சுவது, விற்பது, விபச்சாரம்செய்வது, ஜெயில்களில் கஞ்சா கடத்த ஏற்பாடு செய்வது அனைத்துமே போலீஸ்காரன்தான் செய்கிறான்.

இவ்வளவு பெரிய போர்ஜரி பேர்வழிகளை அரசு என்ன செய்கிறது? எல்லாருமே மோசடிக்காரர்கள்தான்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதாகக் கூறப்படுவது சுத்த ஏமாற்றுவேலை. ஆதிதிராவிடர்களுக்கு அனைத்து வசதிகள் எப்போதுகிடைக்கிறதோ, அப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக நாங்கள் நினைக்கிறோம்.

அதுவரையில் சுதந்திரம் இல்லை. இதனால் துப்பாக்கிமுனையில் சுதந்திரத்தை தேடுகிறோம். இதனால்தான் ஏழைகளுக்கு துரோகம் செய்பவர்களைசுட்டுத் தள்ளுகிறோம். போலீஸ் சாராயம் காய்ச்சினால் தலையை கிள்ளுகிறோம். லஞ்சம் வாங்கும் அடாவடி அதிகாரி கையைவெட்டிவிடுகிறோம்.

இதுபோன்ற உபயோகமான காரியங்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்யுமா?

சித்தூர், ஐதராபாத் போன்ற பகுதிகளில் விபச்சாரம் கொடிகட்டி பறக்கிறது. வீட்டுவேலை செய்யும் சிறுமிகள் கட்டாய விபச்சாரத்தில்ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சித்தூரில் ஒரு வீட்டில் வேலை செய்த பரமு என்ற சிறுமியை அவளுடைய முதலாளி கற்பழித்தான். அதன் பின்பு பரமுவை மும்பை சிகப்பு விளக்கு பகுதியில் விலைக்குவிற்றுவிட்டான்.

இதற்கு காரணமாக நான்கு பேரை துடிக்கத் துடிக்க சுட்டுத் தள்ளி விட்டோம். தவறு செய்பவர் யாராக இருந்தாலும் சுட்டுத் தள்ளுவதுதான் எங்கள்இயக்கத்தின் தாரக மந்திரம்.

நக்சலைட்டுகள் என்றால் தீவிரவாதிகள் என்று அர்த்தமில்லை. ஏழைகளுக்கு தோழனாக இருப்பவனே நக்கசலைட். வருங்காலத்தில் நக்சலைட்டுகள்சேர்ந்து ஆட்சி அமைப்போம். அவ்வாறு அமைக்கப்படும் ஆட்சியில் தவறு செய்பவர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் மரண தண்டனைவழங்கப்படும்.

தேசியமயமாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் எடுத்து விடுவோம். கூட்டுறவு முறையில் தான் அனைத்து செயல்பாடுகளும் அமையும்.

எங்கள் இயக்கத்திற்கு சந்தன வீரப்பன் தலைவன் இல்லை. அவனுக்கு சந்தன கட்டைகளை கடத்தத்தான் தெரியும். வேறெதுவும் தெரியாது. இப்போதுஅவன் திருந்தி எங்கள் பக்கம் வந்து கொண்டிருக்கிறான். அவனை விட பலசாலிகள் எங்களிடத்தில் இருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளின் செல்வாக்கும் எங்களுக்கு உண்டு. கொலை கொள்ளைகள் செய்வது போரடித்துவிட்டது. இனி அரசியல் இயக்கம் நடத்தப்போகிறோம். அகிம்சை வழியில் இல்லை. துப்பாக்கி முனையில்...

வருங்காலத்தில் நக்சலைட்டுகள் ஆட்சி நடக்கும். வேலை செய்பவனுக்கே எல்லாம் கிடைக்கும். ஏழை பணக்காரன் வித்தியாசம் இருக்காது. இதுதான்எங்கள் கற்பனை உலகம். ஆனால், இதுவெல்லாம் சாத்தியம்தானா என்பது தெரியவில்லை.

நாட்டில் உள்ள நக்சல் இயக்கங்களை ஒருங்கினைத்து தேசிய அளவில் நக்சலைட்டுகள் மாநாடு நடத்தப்படும். அப்போது நக்சலைட்டு அமைப்பின் வழிமுறைகள்,விதிகள் இந்த மாநாட்டில் வகுக்கப்படும்.

எங்கள் அமைப்புக்கான கொடி தயார் செய்யப்பட்டு விட்டது. மாநாடு அடுத்த மாதம் அதுவும் தமிழ்நாட்டில்தான் நடத்தப்படும்.இவ்வாறு ரிஷிகாலைக்கதிருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+