கர்நாடக பந்த்துக்கு பங்காரப்பா ஆதரவு: பிரச்சினை வெடிக்கும்?
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் ரசிகர்கள் சங்கம் மற்றும் கன்னட சினிமாத் துறையினர் அழைப்பு விடுத்துள்ள மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு மூத்த காங்கிரஸ்தலைவரும், முன்னாள் முதல்வருமான பங்காரப்பா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் அவர் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 58 நாட்களாகி விட்டன. இது வரை இரு மாநில அரசுகளும் எடுத்த எந்த வித முயற்சியும் பலனளிக்கவில்லை. 72வயதான டாக்டர் ராஜ்குமார் விரைவில் விடுதலை ஆக வேண்டும்.
கர்நாடகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.மூட்டுவலியால் அவதிப்பட்டு வரும் ராஜ்குமாரை விரைவில் வீரப்பன் விடுதலைசெய்ய வேண்டும். இதை வலியுறுத்தித்தான் பந்த் நடத்த ராஜ்குமார் ரசிகர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு அரசு ஆதரவு கொடுக்கவில்லையென்றால் அந்த பந்த்திற்கு அர்த்தமில்லாமல் போய் விடும். நான் இந்த பந்த்திற்கு முழு ஆதரவுஅளிக்கிறேன்.
வீரப்பன் நிபந்தனைப்படி, தடா கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். பல்லாண்டுகளாக அவர்கள் சிறையில் வாடுவது அவலம். அவர்களைவிடுவிப்பதற்கு சுப்ரீம்கோர்ட் தடை விதித்திருப்பதால் ராஜ்குமார் விடுதலை தாமதமாகிக் கொண்டே போகிறது.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க 4 வது முறையாகக் காட்டுக்குச் சென்றுள்ள கோபால் இந்த முறை கண்டிப்பாக வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்திராஜ்குமாரை விடுவித்துக் கொண்டு வருவார் என்று நம்புகிறேன்.
ராஜ்குமார் கடத்தப்பட்டு 58 நாட்களாகிவிட்டநிலையில் பர்வதம்மா ராஜ்குமாருக்கு மிகவும் வேதனையடைந்துள்ளார். இப்போது மருத்துவமனையிலும்சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமரை சந்திப்பேன்:
ராஜ்குமார் விடுதலை இன்னும் தாமதமானால் நான் ஓரிரு நாட்களில் டெல்லி சென்று ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாய், உள்துறைஅமைச்சர் அத்வானி ஆகியோரைச் சந்திப்பேன்.
அவர்களைச் சந்தித்து ராஜ்குமாரை விரைவில் விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்துவேன் என்றார்.
முன்னாள் முதல்வரான பங்காரப்பா, கடத்தப்பட்டுள்ள ராஜ்குமாரின் சம்பந்தி என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்குமாரின் மூத்த மகனான நடிகர்சிவராஜ்குமார், பங்காரப்பாவின் மகளைத்தான் திருமணம் செய்துள்ளார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications