கோவை நீதிமன்றத்தில் பவர் கட்
கோவை:
கோவையில் ரூ. 10 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில், ஜெனரேட்டர் வசதிஇருந்தும்,வழக்குகளை விளக்கு வைத்து ஊழியர்கள் கவனித்தனர்.
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே ஓடும் வெள்ளத்தால்,போக்குவரத்து கடும் பாதிப்பிற்குள்ளாகியது. கனமழை பெய்யும்போது ரோடுகளில் ஓடும் வெள்ளத்தால் குறைந்தபட்சம் மூன்று மணி நேரமாவது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வெள்ளம் ஓரளவு வடிந்து விடுவதால் இந்தப்பிரச்னை தொடர்ந்து நீடிப்பதில்லை. ஆனால், மழை பெய்யும்போது, மின்சாரம் தடைபட்டு விடுகிறது. இதனால்,நகர் ழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது.
கோவையில் புதிததாக ரூ. 10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்ற வளாகத்தில் மின்சாரப் பிரச்னைஎழுந்துள்ளது. இந்த நீதிமன்ற வளாகத்திற்கு, மின்சாரம் தடைபடும் காலங்களில், உதவ ஒரு ஜெனரேட்டர்வசதியுடன் கூடிய "பவர் ஹவுஸ் உள்ளது. இந்த ஜெனரேட்டரை இயக்க பணியாளர் ஒருவரும்அமர்த்தப்பட்டுள்ளார்.
ஆனால், ஜெனரேட்டரை இயக்க டீசல் மட்டும் இல்லை. எனவே, நீதிமன்றத்தில் ஜெனரேட்டர் வசதியிருந்தும்,மின்சாரம் இல்லாததால் ஊழியர்கள் அவதிப்பட்டனர்.
விளக்கு ஒளியில் வழக்குகளை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நடுவர் நீதிமன்றங்களில் உள்ளமாஜிஸ்திரேட்டுகள் விளக்கு ஒளியில் வழக்குகளை விசாரணை செய்தனர். நீதிமன்றங்களில் ஏற்கனவேதேங்கியுள்ள வழக்குகளினால் திணறி வரும், வக்கீல்கள், நீதிபதிகள் மற்றும் பணியாளர்கள் கடும் சிரமத்திற்குஇடையே பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications