சொந்த விமானத்தில் இந்தியா திரும்ப தாதா சோட்டா ராஜன் திட்டம்
பாங்காக்:
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த மும்பை அண்டர்வோர்ல்ட் தாதா சோட்டா ராஜன் இந்தவார இறுதியில் தனது சொந்த விமானம் மூலம் இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார் என்று அந் நாட்டு பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது.
மும்பையின் பிரபல தாதா சோட்டா ராஜன் என்ற விஜய் தாமன். இவர் முதலில் மும்பையின் இன்னொரு ரவுடி தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்தார்.இருவரும் சேர்ந்து மும்பையில் தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
இதற்கிடையே, இந்த மாதம் தாய்லாந்து சென்றார் சோட்டா ராஜன். அவருடன் அவரது கூட்டாளிகள் சிலரும் சென்றனர்.
அவர் தலைநகர் பாங்காக்கில் தனது கூட்டாளிகளுடன் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 4 பேர் கும்பல் ஒன்று அவரை துப்பாக்கியால்சுட்டது.
இச்சம்பவத்தில் சோட்டாராஜன் பலத்த காயமடைந்தார். இவரது கூட்டாளிகள் ரோஹித் வர்மா, மைக்கேல் டி சூசா ஆகியோர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். ரோஹித்தின் மனைவி சிக்கந்தி ஹாமாவும் காயமடைந்தார்.
இந்நிலையில், தாவூத் இப்ராஹிமின் கட்டளையின் பேரில் அவரது கூட்டாளி சோட்டா ஷகீலும், மேலும் சிலரும் சேர்ந்து பாங்காக்கில் சோட்டா ராஜனைக்குறி வைத்து தாக்கியுள்ளனர் என்று போலீஸார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக தாவூத் இப்ராகிம்-சோட்டா ஷக்கீல் கும்பலைச் சேர்ந்த 3 பேரைப்தாய்லாந்த் போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர்.
தற்போது சோட்டா ராஜன், பாங்காக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில்தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் மும்பை போலீஸார் அவரை இந்தியாவுக்கு அனுப்புமாறு தாய்லாந்த் போலீஸாரிடம் இன்டர்போல் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆனால், பாங்காக் உதவி போலீஸ் கமிஷனர் சாக்திப் கல்ச்சோர்கன் கூறுகையில், சோட்டா ராஜன் தாய்லாந்தில் எந்தக் குற்றமும் செய்யவில்லை.
அதனால் அவரை நாங்கள் எதுவும் செய்ய முடியாது. அவர் இந்தியா திரும்புவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்.
இதற்கிடையே, சோட்டா ராஜன் இந்த வார இறுதியில் தனது சொந்த விமானம் மூலம் இந்தியா திரும்புவார் என்று அங்குள்ள பத்திரிக்கைகளில்செய்திகள் பிரசுரமாகியுள்ளது.
சோட்டராஜனிடம் இதுகுறித்துக் கருத்துக் கேட்டபோது, நான் இந்த வார இறுதியில் இந்தியா திரும்புவேன். ஆனால் எப்போது என்று கூற முடியாதுஎன்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications