யாழ்பாணம்: துப்பாக்கி ஓசையில் தேர்தல் பிரச்சாரம்
யாழ்பாணம்:
தேர்தல்...தேர்தல் என்று இலங்கையே பரபரப்பில் ஆழ்ந்திருந்தாலும் யாழ்பாணத்தில் பிரச்சார சத்தம் இல்லை.
தேர்தலுக்குரிய அடையாளமே, சுவடோ இங்கே சுத்தமாக இல்லை, வழக்கமான துப்பாக்கிச் சத்தம் தவிர...
யாழ்பாணத்தில் தேர்தலை நினைவுபடுத்தும் ஒரே விஷயம் டக்ளஸ் தேவானந்தாவின ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி தான். இந்தநகரில் உள்ள ஸ்ரீதர் திரையரங்கை தனது கட்சியின் தலைமை அலுவலகமாக மாற்றியுள்ளார் டக்ளஸ்.
இவர் கூறுகையில், ஒரு நாள் உண்மையிலேயே இந்தத் திரையரங்கில் படங்கள் ஓடும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்கிறார்.உசி சுப்மா ரக சீன துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாவலர்களின் தீவிர பாதுகாப்பின் நடுவே அமைதியாய் அமர்ந்திருக்கிறார்.
தேர்தல் சின்னமாக சாட்டிலைட்டுகள், கம்ப்யூட்டர்களை உபயோகிக்கிறது இவரது கட்சி. வரும் அக்டோபர் 10ம் தேதிஇலங்கையில் தேர்தல் நடக்க இருக்கிறது.
அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே யாழ்பாணத்தில் கடும் போர் நடந்து வரும் நிலையில் தேர்தலைஆதரிக்கும் தமிழர் கட்சியின் தலைவர் என்ற வகையில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார் தேவானந்தா. இவரும் முன்புதுப்பாக்கி ஏந்தி அரசுக்கு எதிராக போரிட்டவர் தான். ஆனால், பின்னர் ஜனநாயகப் பாதைக்கு தனது இயக்கத்தைத் திருப்பிக்கொண்டார்.
தேர்தல், ஜனநாயகம் என்று போன தமிழர் தலைவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர். இதனால், இவர் எப்போதுமேபலத்த பாதுகாப்பில் தான் இருக்கிறார். சமீபத்தில் விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவாகக் கருதப்படும் சங்கிலியன் அமைப்பு,தேர்தலில் பங்கேற்போர் படுகொலை செய்யப்படுவர் என வெளிப்படையாகவே எச்சரித்திருக்கிறது.
ஆனால், தைரியமாகவே இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார் தேவானந்தா. 1994ம் ஆண்டு நடந்த தேர்தலில் யாழ்பாணத்தில்இவரது கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதே போல இப்போதும் யாழ்பாணத்தில் உள்ள 9 இடங்களையும் தனது கட்சி வெல்லும்என்கிறார்.
ஆனால், 1994ம் ஆண்டு தேர்தலில் மொத்தம் 3 சதவீத மக்கள் தான் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தது. 5 லட்சம் மக்கள்தொகை கொண்ட யாழ்பாணத்தில் 2 ஈ.பி.டி.பி. வாக்காளர்கள் வெறும் 100 ஓட்டுகள் மட்டுமே வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், இப்போது ஆளும் கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேவானந்தா இந்த புள்ளி விவரங்களை எல்லாம்ஒதுக்குகிறார். இந்த முறை ஓட்டுக்கள் அதிகம் விழும் என நம்புகிறார்.
எப்போதும் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாவல்கள் சூழ தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் தேவானந்தா மீது டியூஎல்எப் போன்ற பிறதமிழர் கட்சிகள் புகார் கூறியுள்ளன. ஆயுதங்களுடன் பிரசாரம் செய்ய தேவானந்தாவை அனுமதிக்கக் கூடாது என்கின்றனர் இந்தக்கட்சியினர்.
ஆனால், தனது ரிவால்வரை எடுத்துக் காட்டிப் பேசுகிறார் டக்ளஸ். என்னைக் கொல்ல எல்.டி.டி.ஈ. பலமுறை முயன்றுள்ளது.தொடர்ந்து நான் அவர்களின் கொலைப் பட்டியலில் இருக்கிறேன். நான் எப்படி ஆயுதம் இல்லாமல் நடமாட முடியும் என்கிறார்.
ஆனால், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை முழுவதுமாய் இழந்துவிட்டு நிற்கிறது யாழ்பாணம். போரின் காயங்களால் ரணம்தாங்கி நிற்கும் அந்த நகரம் தேர்தலை ஒரு பொருட்டாய் மதித்ததாய் தெரியவில்லை.
தேவானந்தாவின் போஸ்டர்கள் மட்டும் தான் தேர்தலை நினைவுபடுத்துகின்றன. யாழபாணத்தின் பெரும் பகுதிகளை தனதுகட்டுப்பாட்டி வைத்துள்ள விடுதலைப் புலிகள் தேர்தலை முறியடிப்பதில் தீவிரமாகவே உள்ளனர்.
யாழ்பாணத்தில் உள்ள 10 சதவீத வாக்குப் பதிவு மையங்கள் ஊருக்கு வெளியே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளபகுதிகளுக்கு இடம் பெயர்க்கப்பட உள்ளன. இதனால், யாராவது வாக்களிக்க வேண்டுமானால், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளபகுதியைத் தாண்டி பல மணி நேரம் பயணம் செய்து, ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை அடைய வேண்டும். இப்படிஎல்லாம் சிரமப்பட்டு யார் வாக்களிக்கப் போகிறார்கள் என்கிறார் யாழ்பாண தலைமை நிர்வாக அதிகாரி சண்முகநாதன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications