ஜாதிகளில் சிக்காமல் இந்தியராக இருப்போம்!
சென்னை:
ஜாதியில் சிக்காமல் இந்தியராக இருப்போம் என்று தமிழ்நாடு பாரதீய ஜனதாக் கட்சித்தலைவர் கிருபாநிதி கூறினார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் பெருங்கோட்ட பிரதிநிதிகள் மாநாடுஒசூரில் நடந்தது. மாநாட்டில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் கிருபாநிதிபேசுகையில், தமிழகத்தில் சாதிக் கட்சிகள் புற்றீசல்கள் போல் முளைத்து வருகின்றன.இதில் சிக்காமல் இந்தியர் என்ற உணர்வோடு இருப்போம்.
2001ல் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் 40 அல்லது 50 எம்.எல்.ஏ.க்களையாவதுதேர்வு செய்து சட்டசபைக்கு அனுப்பும் வகையில் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும் என்றார்.
அகில இந்திய பா.ஜ.க. பொதுச் செயலாளர் வெங்கய்யா நாயுடு பேசுகையில்,தலைசிறந்த மொழியான தமிழில் பேச இயலாமைக்கு வருத்தப்படுகிறேன்.இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்கும் வகையில் ப.ாஜ.க. செயல்பட்டுவருகிறது.
மூன்று கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது. ஒரு காலகட்டத்தில் சிறிய கட்சியாக இருந்த பாஜக தற்போது பெரிய கட்சியாகஉருவெடுத்துள்ளது. வாஜ்பாய் தலைமையை ஏற்க இன்று பல்வேறு கட்சிகள் போட்டிபோடும் நிலை உருவாகி வருகிறது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு வகுப்பு கலவரமோ, மதக்கலவரமோ இல்லை. பா.ஜ.க.அமைச்சரவையில் உள்ள எந்தவொரு அமைச்சர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை.
முஸ்லீம்கள் மற்றும் சிறுபான்மை இன மக்கள் பா.ஜ.க.விற்கு வருவதைவரவேற்கிறோம். தலித் இனத்தை சேர்ந்த ஒருவரைத் தான் பா.ஜ.க. தலைவராககொண்டுள்ளது.
காஷ்மீரில் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு வருகிறது. இன்னும்இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்பட்டு விடும்என்றார்.
அகில இந்திய துணைத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்:
நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் காங்கிரஸ் ஏழை எளியவர்கள்,விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மாறாக ஊழல் தான் தலைவிரித்தாடியது.
காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட சீர்கேடுகள் படிப்படியாக களையப்பட்டு வருகிறது.யாரும் குற்றம் சொல்ல முடியாத வகையில் ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறோம்.பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வன்முறை தலைவிரித்தாடுகிறது.
வன்முறையை தூண்டுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பிரதமரின் அயல்நாட்டு உறவுக்கு அவருடைய தனிப்பட்ட திறமையே காரணம். உலகநாடுகள் மதிக்கத்தக்க தலைவராக வாஜ்பாய் மாறி வருகிறார் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications