ஒருவருக்கு கைவிலங்கு .. ஒருவருக்கு பூவிலங்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாப்பிள்ளை மோசடிப் பேர்வழி என்ற தகவல் மணமேடையில் வைத்து தெரியவர, வேறுவழியின்றி அந்த திருமணம் நிறுத்தப்பட்டு, திடீர் மாப்பிள்ளை தேர்வு செய்யப்பட்டுதிருமணம் நடத்தி முடிக்கப்பட்டது.

கடலூர் சப்-ஜெயில் எதிரில் டீக்கடை வைத்து இருப்பவர் ஆடலரசு (32). இவருக்கும்பண்ருட்டி அருகேயுள்ள குடுமியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த கவுரிக்கும் திருமணம்நிச்சயிக்கப்பட்டது. அருகில் உள்ள புதுப்பேட்டை திருமண மண்டபத்தில் திருமணஏற்பாடுகள் நடைபெற்றது.

திருமணத்திற்காக உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் வந்திருந்தனர். மண்டபத்தில்நிறைந்திருந்த கூட்டத்தினருக்கு மத்தியில் மணமேடையில் மணமக்கள் காத்திருந்தனர்.தாலி கட்ட வேண்டியது தான் பாக்கி.

இந்த நேரத்தில் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியபெண் ஒருவர், இந்த திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் என்று மன்றாடினார்.

மாப்பிள்ளையாக மணமேடையில் உட்கார்ந்திருக்கும் ஆடலரசு ஏற்கனவேதிருமணமானவர். கடலூர் எம்ஜிஆர் நகரில் பால் விற்கும் ஜோதி என்ற பெண் தான்அவரது மனைவி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. பணத்தாசை பிடித்துஆடலரசு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று உண்மைகளைபோன் குரல் அடுக்கியது.

உஷாரான போலீசார் குடுமியாங்குப்பத்திற்கு விரைந்தனர். அங்கு பெண் வீட்டாரைசந்தித்து விவரங்களை தெரிவித்தனர். இதைக் கேட்டதும் மணமகளின் தாயார் மயங்கிவிழுந்தார்.

மாப்பிள்ளை ஆடலரசுவை "முறைப்படி விசாரித்தபோது உண்மையை கக்கினார்.அதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. ஆனாலும், அதே மேடையில் கவுரிக்கு வேறுமாப்பிள்ளையுடன் திருமணம் முடிக்க வேண்டும் என்று பெரியவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து அங்கு வந்திருந்த செட்டிப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊர்பொதுமக்கள் கூடிப் பேசி திடீர் மாப்பிள்ளையாக ஏழுமலையை தேர்வு செய்தனர். அவரும்கவுரியை மணம் முடிக்க சம்மதம் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் திடீர் மாப்பிள்ளை ஏழுமலைக்கும், கவுரிக்கும்கல்யாணம் நடந்தது.

பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்ய முயன்ற குற்றத்திற்காக பழைய மாப்பிள்ளைஆடலரசுவை அழைத்துக் கொண்டும், கல்யாணச் சாப்பாட்டை முடித்துக் கொண்டும் காவல்நிலையம் திரும்பினர் போலீசார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+