ஜெ. நகைகளை சரி பார்க்க 50 பேர்
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 4 கோடிரூபாய் மதிப்புள்ள நகைகளைமதிப்பீடு செய்ய பதிவு பெற்ற 50 நகை மதிபீட்டாளர்கள் பட்டியல் அரசு தர்ப்பில்செவ்வாய்க்கிழமை தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் வருமானத்துக்குஅதிகமாக 68 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குதொடர்ந்திருந்தனர்.
ஜெயலலிதாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கவைர நகைகளையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நகைகள் தற்போது நீதிமன்ற பாதுகாப்பில், இந்திய ரிசர்வ் வங்கியின் லாக்கரில்வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், உம்மிடி நந்தகோபால் என்ற நகை மதிப்பீட்டாளர் வருமானவரித்துறையினரால் நியமிக்கப்பட்டார். அவர் தன்னால் நகைகளை மதிப்பீடு செய்யஇயலாது என நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பி வைத்தார்.
பின்னர் பிரணாவ். எச் மேத்தா, சுகுமார், உம்மிடி கண்ணன் ஆகியோர் நகைமதிப்பீட்டிற்காக நியமிக்கப்பட்டனர். அவர்களும் நகையை மதிப்பிட இயலாது எனநீதிமன்றத்திற்கு கடிதம் அனுபபினர்.
இந்த வழக்கு திங்கள் கிழமையன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பினர் புதிய நகைமதிப்பீட்டாளர் பட்டியலை தாக்கல் செய்வதாகக் கூறினார். இதன் படி செவ்வாய்க்கிழமை50 பேர் கொண்ட நகை மதிப்பீட்டாளர் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.இதில் நகையை மதிப்பீடு செய்ய இயலாது என்று கூறிய 4 பேர் பெயரும் அடங்கியுள்ளது.
முதலாவது நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் இந்த வழக்கை வரும் 28-ம் தேதிக்குஒத்தி வைத்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications