தமிழர்களை திசை திருப்ப முடியாது .. வாழப்பாடி
சென்னை:
தமிழக மக்களை எந்த போராட்டத்தாலும் திசை திருப்ப முடியாது என்று தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்துதற்போதுள்ள திமுக அரசுக்கு எதிராக காங்கிரஸ், அதிமுக, தமாகா, இடது சாரி கட்சிகள்சேர்ந்து போர்கொடி தூக்கியுள்ளன.
சேலம் இரும்பு உருட்டாலை பிரச்சினைக்காக சில நாட்களுக்கு முன் அதிமுகபோராட்டம் நடத்தியது. இப்போது விவசாயிகள் பிரச்சினைகளுக்காக போராட்டம்நடத்துவதாக தமாகா அறிவித்துள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்து திமுக அரசுக்கு அவப்பெயர்ஏற்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் இத்தகைய போராட்டங்களை நடத்துகின்றன.
தாங்கள்தான் விவசாயிகளுக்கு சாதகமாக இருப்பதாக காட்டிக் கொள்ளவே அக்கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு கருணாநிதிதலைமையிலான திமுக அரசு பெருமளவு உதவிகள் செய்துள்ளது.
அரசு விழாக்களில் எல்லாம் அரசு செய்த உதவிகளை முதல்வர் கருணாநிதிபட்டியலிட்டுப் பேசி வருவதை மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே எதிர்க்கட்சிகளின்அரசியல் நாடகத்தை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் எத்தனை கட்சிகள் கூட்டுசேர்ந்தாலும் வெற்றி பெற முடியாது. எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் சமயத்துக்குஏற்றார்போல் செயல்படும் பச்சோந்திகளை விட மோசமானவர்கள் என்று தமிழகமக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.இது உறுதி.
தமிழக மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை எந்த போராட்டமும் திசைதிருப்ப முடியாது என்றார் வாழப்பாடி.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications