பெங்களூர் வந்த சென்னை விமானத்தில் குண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து பெங்களூர் வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டுஇருப்பதாக தகவல் வந்ததையடுத்து விமானத்தில் தீவிர சோதனைமேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் காலை 10.05க்கு புறப்பட்ட அந்த விமானம் 10.45 மணிக்குத்தரையிறங்க வேண்டும். விமானம் வந்து கொண்டிருந்த வேளையில் விமானத்தில்வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து பெங்களூர்விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்துவெளியேற்றப்பட்டனர். விமான நிலையம் மூடப்பட்டது. விமானத்தில் கடும்சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்துசிறிது நேரம் தாமதமாக அந்த விமானம் புனே புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications