பெங்களூரில் கருணாநிதியின் கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூர் தமிழக முதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை எரிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்துவந்து தீயை அணைத்தனர்.
அதே போல நகரின் பல்வேறு இடங்களில் 6 பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது.
கருணாநிதியின் உருவப் பொம்மையை எரிக்க முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலர் தப்பிஓடிவிட்டனர்.
4 இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது. இதில் 6 பஸ்கள் சேதமடைந்தன. பெங்களூரில் மட்டும்500 சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கவர்னர் மாளிகை எதிரே ஆர்பாட்டம் நடத்திய கன்னட சாளுவளி கட்சியின் தலைவரும் தீவிர தமிழ்எதிர்ப்பாளருமான வாட்டாள் நாகராஜ் தனது ஆதரவாளர்கள் சிலருடன் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications