தொழில் முதலீட்டில் முதலிடத்தில் தமிழ்நாடு
சென்னை:
எல்லா மாநிலங்களிலும் கண்ணாடித் தொழிற்சாலைகளை வாங்கிய செயின்ட் கோபைன் நிறுவனம், தமிழகத்தில் எதையும்விலைக்கு வாங்க முடியாமல் அந்நிறுவனமே சென்னைக்கு அருகில் கண்ணாடித் தொழிற்சாலையை நிறுவியிருப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்று முதல்வர்கருணாநிதி கூறினார்.
ஸ்ரீபெரும்புதூரில் செயின்ட் கோபைன் மிதவை கண்ணாடி தொழிற்சாலை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர்கருணாநிதி பேசியதாவது:
இந்த தொழிற்சாலை 525 கோடி ரூபாய் முதலீட்டில் இது அமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு தொழிற்சாலையும் விரைவில்அமையவிருக்கிறது.
உலகம் முழுவதும் இந்தத் தொழில் நிறுவனத்தில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தொழில் வளர்ச்சிக்கான முதலீட்டில் தமிழகம் ஐந்தாவது, ஆறாவது இடத்தில் இருந்தது. தற்போதுஅந்த இடங்களையெல்லாம் கடந்து இந்தியாவிலே தொழில் முதலீட்டில் தமிழ்நாடு முதல் இடத்திலே இருக்கிறது.
1996க்கு பிறகு இந்த நான்கைந்து ஆண்டுகளில் தொழில் வளர்ச்சிக்காக நாம் எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சிகள்சாதாரணமானதல்ல. இந்த முயற்சிகளுக்கு ஏன் வெற்றி கிடைத்தது என்றால், இங்கே தொழில் தொடங்க வருபவர்களிடத்தில் நாம்அவர்களுடைய தொழில் வளர்ச்சியைத் தான் எதிர்பார்க்கிறோம். தனியாக அவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. எனவேஅவர்கள் பயமில்லாமல் இங்கே இருக்கிறார்கள்.
முன்பெல்லாம் (ஜெயலலிதா ஆட்சியில்) தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒரு நிறுவனம் வருகிறது என்றால், மிகுந்த பயத்தோடுஎன்ன கேட்பார்களோ; எவ்வளவு கேட்பார்களோ என்கிற அச்சத்தோடு தான் வரவேண்டியிருந்தது.
ஆனால், இன்றைக்கு அவர்களிடம் தாராளமாக வாருங்கள், தொழிலைத் தொடங்குங்கள் என்று சொல்கிற ஒரு அரசாக திமுகஅரசு இருக்கிறது என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications