அரசு மருத்துவனையால் கையை இழந்த ஏழைத் தாய்
கோவை:
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஏழை பெண் மருத்துவமனையில் நடந்த தவறானசிகிச்சையால் கையை இழந்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவனையிலேயே தொடர் உண்ணாவிரதப்போராட்டதை துவக்கியுள்ளார்.
ஊட்டி அருகே தலகுந்தாக பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மணியின் மனைவி வள்ளி. இவருக்கு வயது 24.இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இதையடுத்து குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கோவை அரசு மருத்துவனைக்குவந்தார். கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி இந்த அறுவை சிகிச்சை நடந்தது.
அறுவை சிகிச்சை நடந்து முடிந்த சில மணி நேரத்தில் வள்ளியின் வலது கையில் அரிப்பு ஏற்பட்டது. கை வீங்கியது.இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆனால், கை கருப்பு நிறத்திற்கு மாறியது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கையின் செயல்பாடும் நின்று போனது.இதையடுத்து அந்தக் கையை வெட்டி எடுத்துவிட முடிவெடுத்தனர் மருத்துவர்கள். வேறு வழி இல்லாததால் அந்தஏழைப் பெண் இதற்கு சம்மதித்தார்.
ஜூலை 19ம் தேதி இந்த அறுவை சிகிச்சை நடந்தது. முழங்கை வரை கை வெட்டி எடுக்கப்பட்டது.
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு வந்த அந்த அப்பாவிப் பெண் தனது கையை இழந்துவிட்டு நிற்கிறார்.இதையடுத்து தனக்கு நஷ்டஈடு கேட்டு முதல்வர் கருணாநிதிக்குக்கும் மருத்துவத்துறை அமைச்சர் ஆற்காடுவீராசாமிக்கும் மனு அனுப்பினார்.
ஆனால், இவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தும் ஏழைப்பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
இதையடுத்து கோவை மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்தார் வள்ளி. பெண்கள் சிகிச்சைப் பிரிவில்போய் தனது காலவைரயற்ற உண்ணாவிரதத்தைத் துவக்கியுள்ளார்.
ஒரு கையுடன், தனது கைக் குழந்தையுடன் அந்த அப்பாவிப் பெண் உண்ணாமல் மயங்கிய நிலையில்அமர்ந்திருப்பதைப் பார்த்து மருத்துவனைக்கு வரும் நோயாளிகளே கண் கலங்குகின்றனர்.
இதைக் கண்டும் காணாதது போல கலங்காமல் நிற்கிறது தமிழக அரசு.












Click it and Unblock the Notifications