சத்தி கோர்ட்டில் வீரப்பன் கூட்டாளிகள் 20 பேர் ஆஜர்
சேலம்:
சத்தியமங்கலம் கோர்ட்டில் வீரப்பனின் கூட்டாளிகள் 20 பேர் புதன்கிழமைவிசாரணைக்காக ஆஜர் செய்யப்பட்டனர்.
ஆஜர் செய்யப்பட்டவர்களில் முக்கியமானவன் துப்பாக்கிச் சித்தன் எனப்படும் சித்தன்.வீரப்பனின் முக்கியக் கூட்டாளியாக விளங்கியவன் இந்த சித்தன். துப்பாக்கியால் குறிதவறாமல் சுடுவதால் இவனுக்கு துப்பாக்கிச் சித்தன் என வீரப்பன் பெயர் வைத்ததாககூறப்படுவதுண்டு.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் போலீஸாரிடம் சித்தன் சரண்அடைந்தான். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
துப்பாக்கிச் சித்தன் தவிர கல்மண்டிபுரத்தைச் சேர்ந்த மாதன், சிவா, சென்நெஞ்சன்,ராஜா, மாதவப்பா உள்பட 17 பேர் மீது சிறப்பு அதிரடிப்படை போலீஸார் வழக்குத்தொடர்ந்தனர். இவர்கள் அனைவரும் தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர்.
இந்த 17 பேருடன், சித்தன், அவனது மனைவி குப்பி, மகாதேவன் ஆகியோரையும்சேர்த்து 20 பேரும் சத்தி கோர்ட்டில் விசாரணைக்காக புதன்கிழமை ஆஜர்செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications