பந்த்தை அமைதியாக நடத்துவோம் .. சொல்கிறார் ராஜ்குமார் மகன்
பெங்களூர்:
எங்களது தந்தையின் விருப்பத்திற்கேற்ப கர்நாடக பந்த்தை மிகவும் அமைதியாகநடத்துவோம் என கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் கூறியுள்ளார்.
பந்த்தை மிகவும் அமைதியாக நடத்துமாறு கோரி வீரப்பன் பிடியில் உள்ள நடிகர்ராஜ்குமாரிடமிருந்து புதன்கிழமை கேசட் ஒன்று வந்தது. இதுகுறித்துசெய்தியாளர்களிடம் சிவராஜ்குமார் பேசுகையில், அப்பாவிடமிருந்து ஆடியோ கேசட்வந்துள்ளது. குடும்பத்தினர் அனைவரும் அதைப் போட்டுக் கேட்டோம்.
பந்த்தின்போது யாருக்கும் தொந்தரவு ஏற்படக் கூடாது என்று அதில் அப்பாகூறியுள்ளார். அதையே நாங்களும் விரும்புகிறோம். பெங்களூர், மைசூர், குனிகல்ஆகிய நகரங்களில் ஊர்வலங்கள் நடத்தினோம். அப்போதெல்லாம் எந்தவன்முறையும் நடைபெறவில்லை. அதேபோல பந்த்தையும் அமைதியாகநடத்துவோம்.
தசரா விழாவின்போது எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடைபெறக் கூடாது என்றஅப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றுவோம். விழா தடைபட நாங்கள் காரணமாகஇருக்க மாட்டோம்.
பந்த்தின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. இரு மாநில அரசுகள்மற்றும் மத்திய அரசுக்கு எங்களது நிலையை புரிய வைக்கத்தான் இந்தப்போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம். மொழி, இன, மத வேறுபாடின்றி அனைத்துத்தரப்பினரும் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளனர் என்றார்சிவராஜ்குமார்.












Click it and Unblock the Notifications