வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1450 இந்தியர்கள் வங்கதேசத்தில் தஞ்சம்
டாக்கா:
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,450 இந்தியர்கள் வங்கதேசத்தின் தென்மேற்கு மாவட்டமான குஷிட்டாமாவட்டத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரமாக வங்க தேசத்தின் மேற்கு பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தஞ்சம் புகுந்த 1,450 பேரும் மேற்கு வங்கத்தின் நாடியா, மால்டா மாவட்டங்களில் வீடிழந்தவர்கள். இவர்களின் வீடுகள் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டன.
குஷிட்டா மாவட்டத்தில் பேராமாரா மற்றும் மேர்புரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காப்பிடங்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
மேற்கு வங்கத்தின் எல்லையை ஒட்டிய வங்க தேசத்தின் மேற்குப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. வெள்ள நீர்பேனாபோல் துறைமுகத்துக்குள்ளும் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.
எல்லை கடந்து வரும் அதிகமான நீர்வரத்தை தேக்கி வைத்துக் கொள்ள முடியாததால் வெள்ளம் ஏற்பட்டது என வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவிக்கிறது.
வங்க தேசத்தின் மேகர்பூர், சாவுதாங்கா, ஜேசோர் மற்றும் ஜெனாய்தா மாவட்டத்தின் வெள்ள நிலைமை இந்தியாவிலிருந்து வரும் வெள்ள நீரால்மேலும் மோசமடையக் கூடும். மேற்குப் பகுதிகளில் உள்ள தடுப்புச் சுவர்கள் உடைந்துள்ளதும் வெள்ள நிலைமை மோசமானதற்கு ஒரு காரணமாகும்.
இந்தியர்கள் வங்க தேசத்திற்கு செல்வது பற்றி எல்லையை பாதுகாத்து வரும் இருநாட்டு எல்லைப் பாதுகாப்புப் படைக்கும் வங்க தேச ரைபிள்படையினருக்கும தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளம் 10 தென்மேற்கு மாவட்டங்ளை பாதிதத்துள்ளது. இதில் 1,70,000 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications