டான்சி வழக்கில் அக். 9ல் தீர்ப்பு
சென்னை:
அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியதாக முன்னாள்முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது தொடரப்பட்ட வழக்கில் அடுத்த மாதம் 9-ம்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் அறிவித்தார்.
தீர்ப்பு அறிவிக்கும் போது ஜெயலலிதா, சசிகலா உட்பட ஆறுபேரும் நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் டான்சிநிலத்தை குறைந்த விலைக்கு ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்ப்ரைசஸ்நிறுவனங்களுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுபற்றி சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி சென்னை 3-வது தனிநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
ஜெயலலிதா, சசிகலா, முன்னாள் அமைச்சர் முகமது ஆசீப், முன்னாள் ஐ.ஏ.எஸ்அதிகாரி டி.ஆர்.சீனிவாசன், ஜெயலலிதாவின் இணைச் செயலாளர் கற்பூரசுந்தரபாண்டியன், முத்திரைத்தாள் துணை இயக்குனர் நாகராஜன் ஆகியோர் மீதுவழக்கு தொடரப்பட்டது.
ஜூன் மாதம் முதல் வாரத்தில் சாட்சி விசாரணைகள் முடிவடைந்தன. அரசு தரப்பில் 50பேர் சாட்சியம் அளித்தனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 8 பேர்சாட்சிகளாக விசாரிக்கப்பட்டார்கள்.
இந்த மாதம் 4-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் வாதம் நடைபெற்றது. அரசு தரப்பில்மூத்த வழக்கறிஞர் என். நடராஜன் ஆஜர் ஆனார்.
ஜெயலலிதா, சசிகலா சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினோத் அரவிந்த் பாப்டே,சென்னையைச் சேர்ந்த ஜோதி ஆகியோர் வாதாடினார்கள். வெள்ளிக்கிழமை பிற்பகல்12 மணியுடன் விசாரணை முடிந்தது. இந்த வழக்கில் அடுத்தமாதம் 9-ம் தேதி தீர்ப்புவழங்கப்படும் என்று நீதிபதி அன்பழகன் அறிவித்தார்.
வருகின்ற அக்டோபர் 9-ம் தேதி, ஜெயலலிதா, சசிகலா உட்பட குற்றம் சாட்டப்பட்டஅனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications