3-ம் தேதி கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் விவகாரத்தில் தற்போது எழுந்துள்ள சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கர்நாடக மாநிலஅரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், கோபால் திரும்பி வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துமுடிவெடுக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் கிருஷ்ணா தெரிவித்திருந்தார்.
தற்போது கோபால் வெறும் கையுடன் திரும்பி வந்துள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவெடுக்க முதல்வர் கிருஷ்ணாதீர்மானித்துள்ளார்.
அக்டோபர் 3-ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்டியுள்ளார். அன்றைய தினம் ராஜ்குமார் விவகாரத்தில் அடுத்த கட்டநடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்றார் கார்கே.












Click it and Unblock the Notifications