பாரத் சன்சார் நிகாம் லிமிடெட் இயங்கத் தொடங்கியது
டெல்லி:
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான பாரத் சன்சார் நிகாம்லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.) அக்டோபர் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல்செயல்படத் துவங்கியது.
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். நிறுவனமாக இது இயங்கும்.
இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ. 63,000 கோடி ஆகும். நான்கு லட்சம்ஊழியர்கள் இதில் பணியாற்றுவார்கள். இந்த புதிய நிறுவனத்தில் அரசின் பங்கு 100சதவீதமாக இருக்கும்.
நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக டி.பி.எஸ்.சேத்நியமிக்கப்பட்டுள்ளார். பூர்வார் நிதி இயக்கநராக இருப்பார். பிரீத்பால் சிங் செயல்இயக்குநராக செயல்படுவார். குரானா வர்த்தக இயக்குரநாகவும், ஷபீர் அகமதுதிட்டமிடுதலுக்கான இயக்குநராகவும் இருப்பார்கள். மனிதவள இயக்குநராக கிரந்திகுமார் இருப்பார்.
டெல்லியில் நடந்த தொடக்க விழாவில் பாஸ்வான் பேசுகையில், ஊழியர்கள் மற்றும்நுகர்வோருக்கு மிகுந்த பலன் அளிக்கும் விதமாகவே பி.எஸ்.என்.எல்.ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
தற்போது தொலைத் தொடர்புத்துறை தனியார் மயமாகவுள்ளதால், பல தனியார்நிறுவனங்கள் வந்த பிறகு பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு வர்த்தக ரீதியில் கடும்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அரசு வசம் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களில் மகாநகர்டெலிபோன் நிகாம் லமிடெட் (எம்.டி.என்.எல்.) நிறுவனத்தில் அரசின் பங்குத்தொகை 56 சதவீதமாக உள்ளது. இதேபோல, விதேஷ் சன்சார் நிகாம் லிமிடெட்(வி.எஸ்.என்.எல்.) நிறுவனத்தில் அரசின் பங்கு 53 சதவீதமாகும்.
இந்தியாவின் முக்கிய மற்றும் ஒரே இன்டர்நெட் சேவையைவி.எஸ்.என்.எல்.தான்வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications