நாகப்பாவை மீண்டும் காட்டுக்கு அனுப்ப தயார் .. தந்தை
தார்வார்:
வீரப்பன் திரும்ப அழைத்தால் என் மகன் நாகப்பாவை திரும்பவும் காட்டுக்கு அனுப்பத் தயார் என்று நாகப்பாவின் தந்தை கூறினார்.
வீரப்பன் பிடியிலிருந்து 60 நாட்களுக்குப் பிறகு, அரசுத் தூதராக நக்கீரன் கோபால் 4 வது முறையாகக் காட்டிற்குச் சென்றிருந்த போதுபிணைக்கைதிகளில் ஒருவரான நாகப்பா தப்பித்து வந்துவிட்டார்.
நாகப்பாவின் சொந்த ஊர் தார்வார் அருகேயுள்ள மரதகி ஆகும். அங்கு நாகப்பாவின் தந்தை ருத்ரப்பா கொட்டாவும், தாய் மல்லவாவும் வசித்துவருகிறார்கள்.
நாகப்பா தப்பி வந்தது குறித்து அவரின், தந்தை ருத்ரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் மகன் நாகப்பாவுக்கு எல்லாமே ராஜ்குமார்தான். அவர் தங்கள் சொந்த மகன் போல் நாகப்பாவை நடத்தி வந்தனர். நாகப்பா இந்த அளவுஉயர்ந்ததற்கு ராஜ்குமார்தான் காரணம்.
நாகப்பா தப்பி வந்தது குறித்து பக்கத்துவீட்டுக்காரர்கள் கூறிய போது நான் நம்பவே இல்லை. டெலிவிஷனில் பார்த்தபோதுதான் நம்பினேன். நாகப்பாஎங்களுடன் மரதகியில் கொஞ்ச நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதைக் கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அதேநேரம் ராஜ்குமார் வரவில்லை என்று தெரிந்ததும் மிகவும் கவலையடைந்துள்ளேன்.
ராஜ்குமார் திரும்பி வந்தால்தான் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். எனவே சந்தனக் கடத்தல் வீரப்பன் அழைத்தால் நாகப்பாவை காட்டுக்கு அனுப்பத்தயாராக இருக்கிறோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications