11-ம் தேதி ஆர்ப்பாட்டம் .. காங்கிரஸ் முடிவு
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
வருகிற 11-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சென்னையில்திங்கள் கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் வாயு ஆகியவற்றின் விலையை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியதுகண்டிக்கத்தக்கது. பொது மக்களை வாட்டும் இந்த விலை உயர்வை உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் வற்புறுத்துகிறது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 11ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் இப்போராட்டம் நடைபெறும். மதுரையில் நடைபெறும்போராட்டத்தில் நான் பங்கேற்பேன். கட்சித் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும். 25 மாவட்டங்களில் இருந்து உறுப்பினர் சேர்ப்பு புத்தகங்கள் வந்துவிட்டன. தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை.












Click it and Unblock the Notifications