ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்ட கலால்துறை அதிகாரி கைது
மதுரை:
ரூ.15 லட்சம் வரி ஏய்ப்பு செய்த பஞ்சாலை அதிபரிடம் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட கலால் துறை கண்காணிப்பாளரை சி.பி.ஐ. கைது செய்தது.
திருச்சி கலால் துறையில் (எக்சைஸ்) கண்காணிப்பாளராக பணிபுரிபவர்கள் தமிழரசன், ஜெயக்குமார். இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கரூரில் ஒருதனியார் பஞ்சாலையில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் மில் உரிமையாளர் ரூ.15 லட்சத்திற்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதை கண்டுபிடித்தனர். அதற்கான நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவேண்டுமானால் 5 லட்சம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று மில் உரிமையாளரிடம் கேட்டுள்ளனர்.
மில் உரிமையாளர் பேரம் பேசிப் பார்த்துள்ளார். அதிகாரிகள் மசியவில்லை. 5 லட்சத்திற்கு ஒரு பைசா குறைக்க முடியாது என்று கறாராக இருந்துவிட்டனர்.
இதனால் கோபமடைந்த மில் அதிபர் ரகசியமாக சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார். சி.பி.ஐ. அதிகாரிகள் செய்த ஏற்பாட்டின்படி மீண்டும் மில் அதிபர், கலால்துறை அதிகாரிகளிடம் பேரம் பேசி, 4 லட்சம் ரூபாயை முதல் கட்டமாக தருவதாக ஒப்புக் கொண்டார்.
அதன்படி அந்த தொகையை குறிப்பிட்ட நாளில் வந்து வாங்கிச் செல்லும்படி சொன்னார். பெட்டியுடன் வந்தனர் கலால் துறை அதிகாரிகள். தயாராக இருந்தசி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்தனர்.
நிலைமையை அறிந்த ஜெயக்குமார் திடீரென்று வெளியே ஓடி தப்பித்துக் கொண்டார். தமிழரசன் வசமாக சிக்கிக் கொண்டார். தலைமறைவாக இருந்தஜெயக்குமாரையும் விடாமல் பிடித்து கைது செய்தது சி.பி.ஐ.
இருவரையும் மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் செவ்வாய் கிழமை ஆஜர்படுத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications