ராஜ்குமாரை விட்டுவிடு...வீரப்பனுக்கு நெடுமாறன் கோரிக்கை
மதுரை:
நடிகர் ராஜ்குமாரை உடனே விடுதலை செய்யுமாறு தமிழர் தேசீய இயக்கத் தலைவர் நெடுமாறன், வீரப்பனுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார். இதற்கு நடுவே, வீரப்பனின் அண்ணன் மகன் மாதய்யனை காட்டுக்கு தூதராக அனுப்பத் தயார் என்று வழக்கறிஞர்கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரத்தில், வீரப்பனிடம் இருந்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனுக்கு சமீபத்தில் ஒருகேஸட் வந்தது. அந்த கேஸட்டில், தமிழக, கர்நாடக அரசுகள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதாகவும்,இரு அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் வீரப்பன் பேசியிருந்தான்.
இந்த நிலையில் , தமிழர் தேசிய இயக்கத்தின் ஐந்தாவது மாநில மாநாடு மதுரையில் நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராஜ்குமாரையும் மற்றவர்களையும் கடத்திச் சென்றது சட்டவிரோதமான செயல், இது போன்ற சட்ட விரோத செயல் மூலம்காவிரிப்பிரச்சனை, பெங்களூரில் திருவள்ளூவர் சிலை திறப்பு, தடா கைதிகள் விடுதலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாது.
எனவே கடத்திச்சென்றவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கவேண்டும், மத்திய அரசு விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கவேண்டும் என்றும்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications