1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்குகிறது த.மா.கா
சென்னை:
மத்திய மாநில அரசுகளை எதிர்த்து ஒரு கோடி பேரின் கையெழுத்துக்களை திரட்ட தமிழ் மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் செவ்வாய் கிழமை கட்சித் தலைவர் மூப்பனார் தலைமையில் நடந்த கூட்டத்தில் இம்டிவு எடுக்கப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கடந்த வாரம் சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய தமாகா, இரண்டாவதாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைகண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது.
இப்போராட்ட ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக சத்தியமூர்த்திபவனில் செவ்வாய் கிழமை தமாகா மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கட்சித் தலைவர் மூப்பனார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயந்திநடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன், சோ.பாலகிருஷ்ணன்,பீட்டர் அல்போன்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கையெழுத்து இயக்கத்தை புதன் கிழமை முதல் தொடங்குவது என்றும், தொகுதிவாரியாக 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கையெழுத்துஇயக்கத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி புதன்கிழமை தொடங்கும் இந்த இயக்கம் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு கோடி கையெழுத்துக்கள் பெற்று, 11ம் தேதி கவர்னர்பாத்திமா பீவியிடம் ஒப்படைக்க தமாகா முடிவு செய்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications