ராஜீவ் கொலையாளி முருகன் வரைந்த படத்திற்கு பரிசு
வேலூர்:
காந்திஜெயந்தியை முன்னிட்டு சிறையில் நடந்த ஓவியப் போட்டியில் ராஜீவ் காந்திகொலை வழக்கில் தூக்குதண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன் வரைந்த படத்திற்குமுதல் பரிசு கிடைத்துள்ளது.
காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, வேலூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில்கைதிகளுக்கு மூக்கு கண்ணாடி வழஙகப்ட்டது. கைதிகளுக்கு விளையாட்டு உட்படபல போட்டிகள் நடத்தப்பட்டது.
ஓவியப் போட்டியில் ராஜீவ் காந்தியை கொன்ற வழக்கில் தூக்கு தண்டனைவழங்கப்பட்டுள்ள கைதி முருகன் வரைந்த பெரியார் படத்துக்கு முதல் பரிசுகிடைத்தது. ஆனால் பரிசை வாங்குவதற்கு முருகன் வரவில்லை.
பரிசாக ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டும், 500 ரூபாய் ரொக்கப்பணமும்கொடுக்கப்பட்டது. பரிசுத் தொகையில் முருகனுக்கு ஓவியம் வரையத் தேவையானபொருட்களை வாங்கித் தரும்படி சிறைத் துறை அதிகாரி கூறியதன் படி அந்தப்பொருட்கள் வாங்கிக் கொடுக்கபப்ட்டன.
இந்தப் படத்தை வரைய முருகன் ஒருமாதம் காலம் எடுத்துக் கொண்டுள்ளார். இநதப்படத்தை வரைய அவருக்கு தேவையான பெயிண்ட், போர்டு, பிரஷ் போன்றபொருட்களை சிறை அதிகாரிகள் அளித்துள்ளனர்.
முருகனுக்கு முதல் பரிசு கிடைத்ததை தெரிவித்தபோது அவர் சிறை அதிகாரிகளைகட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இதை தன் மனைவியிடம் தெரிவிக்கும்படிகேட்டுக் கொண்டார்.
பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த முருகன் வரைந்த படத்தைப் பார்த்த சக கைதிகள்முருகனை பாராட்டினர். அந்த ஓவியத்தில் ஸ்ரீதரன் என கையெழுத்திடப்பட்டிருந்தது.அது தனது மற்றொரு பெயர் என முருகன் தெரிவித்தார். சிறையில் முருகன்நூற்றுக்கணக்கான படங்களை வரைந்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications