பங்காரு லட்சுமணனுக்கு இந்து முன்னணி கருப்புக் கொடி

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் பா.ஜ.,தலைவர் பங்காரு லட்சுமணனுக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற14 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியில் புதன்கிழமை தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் செயற்குழுக்கூட்டம் துவங்கியது. இந்தக் கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின்தலைவர்கள் உட்பட முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்திற்கு தலைமை வகிக்க அகில இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின்தலைவரும் மத்திய இணை அமைச்சருமான பங்காரு லட்சுமணன் புதன்கிழமை மதியம்1 மணி அளவில் கோவை வந்தார்.

இந்த செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன்னர் அவர், காருண்யா நகரில்காருண்யா தொழில்நுட்பக் கல்லூரியில், "சாஃப்ட்வேர் மற்றும் டெக்னாலஜி துறைக்குஅடிக்கல் நாட்டும் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த விழாவில் காருண்யா தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் பால் தினகரன்பங்காரு லட்சுமணனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

காருண்யா நகர், கிறிஸ்துவ அமைப்பிற்குச் சொந்தமானது என்பதால் இதில் பங்காருலட்சுமணன் கலந்து கொள்ள இந்து முன்னணி எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இந்தஎதிர்ப்பைக் காட்டும் விதத்தில் கறுப்புக் கொடி காட்ட இந்து முன்னணியின் கோவைநகரச் செயலர் மூகாம்பிகை மணி, தசரதன் உட்பட பலர் ஆலாந்துறை அருகேகூடியிருந்தனர்.

இதனையறிந்த பா.ஜ.க நிர்வாகிகள்அடிக்கல் நாட்டு விழாவில் பங்காரு

லட்சுமணன் கலந்து கொள்ள ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்திருந்தனர். இவர்,ஹெலிகாப்டரில் செல்வது குறித்து தகவல் அறிந்திருந்தபோதிலும், கறுப்புக் கொடிகாட்ட, மூகாம்பிகை மணி தலைமையில் தயாராக இருந்த 14 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.

முன்பு, காருண்யா நகர் நல்லூர்பதி என அழைக்கப்பட்டு வந்தது. இந்தப் பெயர்தற்போது காருண்யா நகர் என மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு இந்து அமைப்புகள்,பா.ஜ.க. ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தன.எனவே, காருண்யா நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவர் கலந்து கொள்ளஇந்து முன்னணி உட்பட இந்து இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. இதனைவெளிப்படுத்தும் விதத்தில் இவர்கள் கறுப்புக் கொடி காட்ட முயன்றனர்.

திசை மாறிய ஹெலிகாப்டர்: போராட்டத்தையடுத்து ஹெலிகாப்டரில் சென்றுபங்காரு லட்சுமணன் விழாவில் கலந்து கொண்டார். ஆனால் அங்கும் குழப்பம்தொடர்ந்தது.

மதியம் 1.00 மணிக்கு தனி விமானம் மூலம் கோவை வந்த பா.ஜ.க தலைவர் பங்காருலட்சுமணன், அங்கிருந்து காருண்யா நகரில் நடக்கும் அடிக்கல் நாட்டு விழாவில்கலந்து கொள்ளச் சென்றார்.

அப்போது ஹெலிகாப்டர் காருண்யா நகருக்குச் செல்லாமல் திசை மாறி, பாரதியார்பல்கலைக் கழகத்திற்குச் சென்றது. பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு மேலாக சுமார் 20நிமிடம் வட்டமடித்த ஹெலிகாப்டர், பின்னர் காருண்யா நகருக்குச் சென்று இறங்கியது.

பாரதியார் பல்கலைக் கழகம், காருண்யா தொழில்நுட்பக் கல்லூரியும் தோற்றத்தில்ஒரே மாதிரியாக இருந்ததால், இந்தக் குழப்பம் ஏற்பட்டது.

காருண்யா நகரில் அடிக்கல் நாட்டிய பின்பு பங்காரு லட்சுமணன் அதேஹெலிகாப்டரில் பொள்ளாச்சியில் நடக்கும் பா.ஜ., செயற்குழுக் கூட்டத்திற்குச் சென்றுகலந்து கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+