இந்தியாவுக்கு ராணுவ தளவாட விற்பனை குறைந்துவிட்டது - ரஷ்யா
வாஷிங்டன்:
இந்தியாவுக்கு ராணுவ தளவாட விற்பனை குறைந்துவிட்டது என்று பாதுகாப்புத்தொடர்பான பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் மற்றும் பல சர்வதேச பாதுகாப்புஅமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள அந்த பத்திரிக்கை, ரஷ்யதுணைப் பிரதமர் இல்யா கிளேபனோவ் மற்றும் சில ரஷ்ய உயர் ராணுவஅதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் கடந்த 30 ஆண்டுகளாக ராணுவ தளவாட விற்பனை ஒப்பந்தத்தைரஷ்யா வைத்துக் கொண்டுள்ளது. ஆனால், சமீப காலமாக, இந்தியாவுக்கு ராணுவதளவாட விற்பனை குறைந்துவிட்டதாக அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ராணுவ தளவாடங்களை அதிக அளவில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கி வந்தது.ரஷ்யாவும் பிற நாடுகளை விட இந்தியாவுக்கு அதிக ராணுவ தளவாடங்களைவிற்பனை செய்து வந்தது.
ஆனால், இப்போது இரு நாடுகளும் வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இதனால், இரு நாடுகளுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றுஅந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இப்போது ராணுவ தளவாட விற்பனை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயானஉறவுதான் மாறியிருக்கிறதே தவிர, மற்றபடி ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியிலும்ராணுவ தளவாடங்களை இணைந்து உற்பத்தி செய்வதிலும் இணைந்து செயல்படுவதுஎன்று இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன என்றும் அவர்கள்கூறியுள்ளனர்.
இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான் ராணுவ தளவாட விற்பனைகுறைந்துவிட்டதற்கு சில உதாரணங்களை அந்தப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக 300 டி-90 ரக டாங்குகளை வாங்க இந்தியா முடிவு செய்திருந்தது. ஆனால்,பின்னர் அது 100 டாங்குகளாகக் குறைக்கபட்டது.
சு-20எம்.கே. ரக விமானங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம்செய்து கொண்டது. ஆனால், பின்னர் அந்த ஒப்பந்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதேபோல் 40 சு-30 ரக விமானங்களை வாங்க 1996-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஆனால், விமானங்களின் எண்ணிக்கை 16 ஆகக்குறைக்கப்பட்டுவிட்டது.
இதுதவிர வேறு பல ராணுவ தளவாட விற்பனை ஒப்பந்தங்களும்குறைக்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications