சென்னை ஆய்வகத்தில் 12 குதிரைகள் திடீர் சாவு
சென்னை:
சென்னை கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்தில் 12 குதிரைகள் திடீரென்று இறந்த சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குதிரையின் உடலில் ஏற்பட்டுள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்காக கொண்டுவரப்பட்ட 130 குதிரைகளில் 12 குதிரைகள் திடீரென்று இறந்துள்ள தகவல்தெரியவந்துள்ளது.
நோய் கிருமிகள் பரவியிருந்த தீவனத்தை குதிரைகளுக்கு அளித்ததினால் தான் 12குதிரைகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன என்று கூறப்படுகிறது.
உணவு பொருள்களில் கலப்படம் முதல் மனிதனை தாக்கும் நோய்கள் பற்றியஅனைத்து ஆய்வுகளையும் மேற்கொள்ளும் இடம் தான் கிங் இன்ஸ்டிடியூட்.தமிழகத்திலேயே மிகப் பெரியதான இந்த ஆய்வகம் சென்னை கிண்டியில்அமைந்துள்ளது.
குதிரைகளின் உடலில் நச்சுத்தன்மை கலந்துள்ளதா என்பதை கண்டறிந்து அவற்றைநீக்குவதற்காக 130 குதிரைகள் இந்த ஆய்வகத்திற்கு கொண்டு வரப்பட்டன.அவற்றிற்கு அளிக்கப்பட்ட தீவனங்களில் நோய் கிருமிகள் தாக்கியிருந்ததால் 12குதிரைகள் திடீரென்று இறந்து விட்டன.
இந்த தகவல் பிராணிகள் நலச் சங்கத்தினரை கொதிப்படையச் செய்துள்ளது. வாயில்லாஜீவன்களை நல்ல முறையில் பராமரிக்க இந்த ஆய்வகம் தவறி விட்டது என்றுஅவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆய்வக அதிகாரிகள் கூறுகையில், குதிரைகளுக்கான தீவனங்கள்மாதவரத்தில் உள்ள ஆவின் யூனிட்டில் இருந்து தான் வாங்கப்பட்டுள்ளன. 45நாட்களுக்கு தேவையான தீவனங்கள் குடோன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.நாள்தோறும் தேவையான அளவு எடுத்து வழங்கப்படும் என்றனர்.
முன்பு தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து கால்நடைகளுக்கான தீவனங்களைவாங்கியதாகவும், அவற்றை ஒரு நாள் திடீர் சோதனையிட்டபோது மணல் போன்றபொருட்கள் கலந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தை நிறுத்திவிட்டு ஆவினுக்கு மாறினோம் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆவின் அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், கடலை புண்ணாக்கு, எண்ணெய்புண்ணாக்கு, தவிடு, பருத்திக் கொட்டை போன்றவை கலந்த தீவனங்களை தான்நாங்கள் அளிக்கிறோம். அவை நல்ல முறையில் பேக் செய்யப்பட்டு தருகிறோம்.எனவே அவை கெட்டுப் போக வாய்ப்பில்லை என்றனர்.
குதிரைகள் சாவு குறித்து கிங் இன்ஸ்டிடியூட் அதிகாரிகள் எந்த விளக்கம் சொல்லமறுத்து விட்டனர். உரிய நேரத்தில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்ற பதிலைமட்டும் தந்தனர்.












Click it and Unblock the Notifications