சட்டசபைத் தேர்தலுக்கு பா.ஜ.க.தயார் .. ஜனா.கிருஷ்ணமூர்த்தி
கோவை:
தமிழக சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க பாரதீய ஜனதாக் கட்சி தயாராக உள்ளது என்று என பொள்ளாச்சியில்அகில இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
பொள்ளாச்சியில் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஜனா. கிருஷ்ணமூர்த்தி, பொள்ளாச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி, ஆட்சிக்கு வந்து ஓராண்டில் பல சாதனைகளை செய்துள்ளது. உலகஅரங்கில் நமது நாட்டை புகழ் பெறச் செய்துள்ளது.
இந்த இரண்டு ஆண்டுகளில் வல்லரசுகளாகத் திகழ்ந்த இரண்டு நாடுகளின் அதிபர்கள் வருகை தந்துள்ளனர். ரஷ்யஅதிபர் புடின் சமீபத்தில் விஜயம் செய்தார். அதற்கு முன்பு அமெரிக்க அதிபர் கிளிண்டன் சுற்றுப்பயணம் செய்தார்.தற்போது இதன் காரணமாக அமெரிக்கர்களிடையே நமது மதிப்பு உயர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் கிளிண்டன் வருகையால் இந்தியாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில்நிரந்தர இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்பு இந்த கவுன்சிலில் இடம் பெற இந்தியாதகுதியற்றது என்ற நிலை தற்போது மாறி, இந்தியாவும் இடம் பெறலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்பில் பா.ஜ.க,அரசு சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இதுவரை ஜம்மு காஷ்மீரில்150க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தமிழகம் 6 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதனைஎதிர்கொள்ள பாரதிய ஜனதா தயாராகவே உள்ளது. சமீபத்தில் குஜராத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க,தோல்வியடைந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். தேசிய ஜனாநாயகக் கூட்டணியின் தேர்தல்வாக்குறுதிகள் 2004ம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்படும்.
பெட்ரோலிய விலை உயர்விற்கு மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்து ராஜினமா செய்துள்ளார். இந்தப்பிரச்னையில் இவர் விரைவில் சமாதானம் அடைவார். மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையைவிருப்பப்பட்டு உயர்த்தவில்லை. சர்வேதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு தான்ஏற்றப்பட்டுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., பா.ம.க விடையே மோதல் அதிகரித்து வருவது இரு கட்சிகளுக்கு இடை ய உள்ளபிரச்னை. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரச்னை எதுவும் ஏற்படாது. அவ்வாறு பிரச்னை நேரும்பட்சத்தில் பா.ஜ.க, தலையிட்டு சமரசம் செய்ய முயற்சிக்கும்.
ராஜிவ் காங்கிரஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளதா, இல்லையா என்பது பற்றி அந்தக் கட்சி தான்அறிவிக்க வேண்டும் என்று ஜனா. கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications